பிரதமர் மோடியுடன், ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு.. தீவிர ஆலோசனை
டெல்லி: டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் அலுவலகத்தில் நரேந்திர மோடியை, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் சேர்ந்து சென்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது அதிமுக சீனியர் தலைவர் மற்றும் ராஜ்யசபா எம்பி தம்பிதுரை உடன் இருந்தார்.
முன்னதாக, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆலோசனைகளை நடத்தியிருந்தனர். அங்கிருந்து நேரடியாக நாடாளுமன்ற வளாகத்துக்கு சென்று பிரதமர் அலுவலகத்தில் அவரை சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினர்.

சசிகலா விவகாரம்
காலை சுமார் 11.20 மணியளவில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள், உள்ளாட்சி தேர்தல், அரசியல் சூழ்நிலை குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவுக்கு சசிகலா உரிமை கொண்டாடுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படதாக கூறப்படுகிறது.

அதிமுக கொடி
அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாகத் தேர்தலுக்கு முன்பு அறிவித்த சசிகலா தற்போது அதிமுக கொடியுடன் காரில் அப்பல்லோ மருத்துவமனை வந்ததும், அதற்கு முன்பாக அதிமுக நிர்வாகிகள் பலருடன் போனில் ஆலோசிப்பதும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் மகன்
ஓபிஎஸ் மகனும் தேனி தொகுதி எம்.பி.யுமான ரவீந்திரநாத் குமார் பாஜகவை லோக்சபாவில் தீவிரமாக ஆதரித்து வருகிறார் என்ற போதிலும், பிரதமர் மோடி தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தபோது, ரவீந்திரநாத் குமாருக்கு இடம் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

பால் காய்ச்சும் நிகழ்ச்சி
இந்த நிலையில், ரவீந்திரநாத் குமாருக்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் டெல்லியில் தனி பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதனால், ரவீந்திரநாத் குமார் தனி பங்களாவில் இன்று பால்காய்ச்சுகிறார். இதில் ஓபிஎஸ் குடும்பத்தோடு பங்கேற்கிறார். இதற்குத்தான் அவர் டெல்லி செல்வதாக இருந்தது. ஆனால் திடீரென எடப்பாடி பழனிச்சாமிக்கும் டெல்லி வருமாறு அழைப்பு வந்துள்ளது. எனவே அவர் நேற்று இரவு டெல்லி கிளம்பினார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன?












Click it and Unblock the Notifications