உள்ளாட்சி இடைத் தேர்தலில் ஓபிஎஸ் ஒத்துழைப்பு தரவில்லை.. நிதி இல்லை.. எடப்பாடி பரபரப்பு குற்றச்சாட்டு
டெல்லி: அதிமுகவில் தொண்டர்களின் செல்வாக்கையும் நம்பிக்கையையும் இழந்த ஓ பன்னீர் செல்வம் கட்சி விரோத போக்கை கடைப்பிடிக்கிறார் என உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த ஓபிஎஸ் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கின் விசாரணை நடைபெறவுள்ளது.

உச்சநீதிமன்றம்
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுவில் அவர் குறிப்பிடுகையில், உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த ஓபிஎஸ் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. கட்சி பொருளாளரான ஓபிஎஸ் கட்சி நிதியை விடுவிக்கவில்லை.

நிதியை விடுவிக்க முடியாத நிலை
அவர் நிதியை விடுவிக்காததால் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியவில்லை. கட்சிக்கான செலவையும் செய்ய முடியவில்லை, அதிமுகவின் பொருளாளராக ஓபிஎஸ் கடமையை செய்ய தவறிவிட்டார். அதிமுக நிர்வாகிகள் நடத்தும் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்குமாறு ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுத்தும் அவர் பங்கேற்கவில்லை.

நம்பிக்கை
கடந்த 23 ஆம் தேதி நடந்த பொதுக் குழுவில் தொண்டர்களின் செல்வாக்கையும் நம்பிக்கையையும் இழந்தததை ஓபிஎஸ் அறிந்தார். இதனால் கட்சியில் இணைந்து செயல்பட ஓபிஎஸ் மறுக்கிறார். கட்சி நலனை ஓபிஎஸ் கெடுத்து வருகிறார். கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு கட்சியின் செயல்பாட்டையும் பொதுக் குழுவையும் முடக்க முற்படுகிறார் என எடப்பாடி பழனிச்சாமி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

ஒற்றைத் தலைமை
ஒற்றைத் தலைமை கோரி 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிவை குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications