அமித்ஷாவுடன் தனியாக 20 நிமிடம் மீட்டிங்.. கைக்குட்டையால் முகத்தை மூடியபடி சென்ற எடப்பாடி! டெல்லியில் பரபர
டெல்லி: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசினார். கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, சிறிது நேரத்தில் மூத்த நிர்வாகிகளை வெளியே அனுப்பிவிட்டு தனியாக சந்தித்து பேசியுள்ளார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது. சந்திப்பு முடிந்து வெளியே போகும் போது பாதுகாப்பு இல்லாமல் கருப்பு நிற கார் ஒன்றில் சென்ற எடப்பாடி, முகத்தை கைக்குட்டையால் மூடியபடி சென்றார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தற்போது அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்டவைகளையும் மறைமுகமாக தொடங்கிவிட்டன. கடந்த லோக்சபா தேர்தலின் போது பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறிய அதிமுக, தற்போது சட்டமன்ற தேர்தலில் அக்கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது.

செங்கோட்டையன் போர்க்கொடி
வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்த மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தனர். இந்த பரபரப்புக்கு இடையே, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார்.
மேலும் ஒருங்கிணைப்பு பணியை தொடங்க 10 நாள் கெடுவையும் செங்கோட்டையன் விதித்து இருந்தார். செங்கோட்டையனின் கட்சி பதவியை எடப்பாடி பறித்து நடவடிக்கை எடுத்து இருந்தார். இதையடுத்து, டெல்லி சென்ற செங்கோட்டையன், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அதிமுகவை ஒருங்கிணைப்பது குறித்து பேசியதாக செங்கோட்டையன் குண்டை வீசினார். இது எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்தது.
அமித்ஷாவுடன் எடப்பாடி சந்திப்பு
இந்த சூழலில்தான் பாஜக மேலிடம் அழைப்பின் பேரில் எடப்பாடி பழனிசாமி இன்று காலை டெல்லிக்கு வந்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இரவு 8 மணியளவில் அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்த நிலையில் சிவி சண்முகம், கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தம்பிதுரை உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, பின்னர் அமித்ஷாவை தனியாக சந்தித்து பேசினார். சுமார் 1 மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
தனியாக சந்தித்து பேசிய எடப்பாடி
டெல்லியில் உள்ள அமித்ஷாவின் இல்லத்திற்கு உள்ளே செல்லும் போது எடப்பாடி பழனிசாமி டெல்லி போலீசாரின் இரண்டு பாதுகாப்பு வாகனத்துடன் சென்றதாக கூறப்படுகிறது. முதலில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் பலரும் சந்தித்து பேசியுள்ளனர். பிறகு நிர்வாகிகள் மட்டும் வெளியே வந்தனர். எடப்பாடி பழனிசாமி வரவில்லை.
அதிமுக நிர்வாகிகள் அமித்ஷாவின் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமியும் வெளியே சென்றதாக தெரியப்படுத்தும் வகையில் டெல்லி போலீசார் வாகனமும் அவர்களுடன் விடுதிக்கு சென்றது. ஆனால் இந்ஹ்டி மொழிபெயர்ப்பாளர் மற்றும் தமிழ் தெரிந்த ஒரு மொழிப்பெயர்ப்பாளரோடு அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி தனியாக 20 நிமிடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
கைக்குட்டையால் முகத்தை மூடியபடி
சந்திப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை யாரையும் சந்திக்கவில்லை. காரின் பின் இருக்கையில் இருந்து பயணித்த எடப்பாடி, அமித்ஷா வீட்டை விட்டு வெளியேறும் போது கைக்குட்டையால் முகத்தை மூடியபடி சென்றார். செய்தியாளர்களையும் எடப்பாடி சந்திக்கவில்லை.

முன்னதாக, அமித்ஷாவுடனான சந்திப்பின் போது அதிமுக உள்கட்சி விவகாரம் உள்ளிட்டவையும் ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
-
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி!












Click it and Unblock the Notifications