எடப்பாடி மருமகன்.. பற்ற வைத்த கபில் சிபல்.. பதறிப்போன ஈபிஎஸ் டீம்! சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது என்ன?
டெல்லி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானதற்கு எடப்பாடி தரப்பில் கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி தரப்புக்கு பிடிக்கவில்லை என்றால் நான் விலகிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் கபில் சிபல்.
அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்கக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, ஆட்சி மாற்றம் காரணமாக மீண்டும் விசாரணை நடத்தத் தேவையில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தினால், லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
இன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பி.எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். கபில் சிபல் வாதாடுகையில், "எடப்பாடி பழனிசாமி அமைச்சராக இருந்தபோது தனது மருமகன் உள்ளிட்ட உறவினர்களுக்கு டெண்டர்களை வழங்கி இருக்கிறார். இது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது." எனத் தெரிவித்தார்.
கபில் சிபல் வாதிடுவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற போது, திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்புக்காக கபில் சிபல் ஆஜரானார், இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறைக்காக கபில் சிபல் ஆஜராவதை ஏற்க முடியாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கபில் சிபில், நான் ஆஜராவது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பிடிக்கவில்லை என்றால் வழக்கில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்றார். பின்னர் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இப்போது யார் ஆட்சியில் இருக்கிறார்கள்? இந்த வழக்கு என்ன? என்பது குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது. நாங்கள் வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கிறோம் எனத் தெரிவித்தனர்.
நெடுஞ்சாலை துறையில் ரூ.4800 கோடி முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீதான மேல் முறையீட்டு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கபில் சிபல் ஆஜராக எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது கபில் சிபல் ஆஜராவாரா, அல்லது விலகிக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்? -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும்.. மாநில செயலாளர் திட்டவட்டம்!












Click it and Unblock the Notifications