ஏர்போர்ட்டில் விழுந்த 'பளார்'.. கங்கனா கன்னத்தில் கை ரேகை பதிவாகிருக்கு.. பரவும் படம்
டெல்லி: சண்டிகர் விமான நிலையத்தில் நடிகை கங்கனா ரணாவத்தை பெண் காவலர் ஒருவர் கன்னத்தில் அறைந்தார். தற்போது அந்த பெண் காவலரின் கை ரேகை கங்கனாவின் கன்னத்தில் பதிந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகை கங்கனா ரணாவத் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியின் விக்ராமாதித்யா சிங்கை 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். கங்கனா ரணாவத்தை பொறுத்தவரை அவரது ஆவேச பேச்சுக்கள் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தும்.

அப்படித்தான் டெல்லியில் விவசாயிகள் போரட்டம் நடத்திய போது, தீவிரவாதிகள் என்று பேசியது சர்ச்சையை கிளப்பியது. தற்போது எம்பியா தேர்வுசெய்யப்பட்டு இருக்கும் நிலையில், சண்டிகரில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் செல்ல கங்கனா ரணாவத் விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
சண்டிகர் விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்ற போதுதான் குல்விந்தர் கவுர் என்ற சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கங்கனா ரனாவத்தை தாக்கினார். டெல்லியில் விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி நடத்திய போராட்டத்தில் பஞ்சாப் பெண்களும் பணத்திற்காகவே கலந்து கொண்டனர் என தரம் தாழ்ந்து பேசியதற்காக அந்த காவலர், அடித்துள்ளார்.
கங்கனா ரணாவத்தை தாக்கிய பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடயே பெண் காவலரின் கை ரேகை கங்கனாவின் கன்னத்தில் பதிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, சண்டீகர் விமான நிலையத்தில் தன்னை பெண் காவலர் தாக்கியது குறித்து கங்கனா வீடியோவில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். கங்கனா ரணாவத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:- என்னை சண்டீகர் விமான நிலையத்தில் பெண் அதிகாரி தாக்கியதை அறிந்த என்னுடைய நலம் விரும்பிகள், மீடியாக்களிடம் இருந்து நான் எப்படி இருக்கிறேன் என கேட்டு எனக்கு செல்போன் அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
நான் நலமாக இருக்கிறேன். சண்டீகர் விமானத்தில் இன்று மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் என்னை சோதனை செய்தனர். அப்போது அதை முடித்துக் கொண்டு நான் அங்கிருந்து நகர்ந்தேன். அப்போது அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் என்னை அறைந்தார். என்னை அவதூறாக பேசினார்.
என்னை ஏன் அடித்தீர்கள் என நான் கேட்டதற்கு, அவர் விவசாயிகளுக்கு ஆதரவாக நான் செயல்படவில்லை என்பதால் அறைந்ததாக தெரிவித்திருந்தார். எப்படியோ நான் பாதுகாப்பாகவே இருக்கிறேன். ஆனால் எனது கவலை என்னவென்றால் பஞ்சாபில் அண்மைகாலமாக அதிகரித்து வரும் தீவிரவாதத்தையும் வன்முறையையும் எப்படி கையாள்வது என்பதுதான் என கங்கனா அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.
சண்டீகர் விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்ற போதுதான் குல்விந்தர் கவுர் என்ற சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கங்கனா ரனாவத்தை தாக்கினார். டெல்லியில் விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி நடத்திய போராட்டத்தில் பஞ்சாப் பெண்களும் பணத்திற்காகவே கலந்து கொண்டனர் என தரம் தாழ்ந்து பேசியதற்காக அந்த காவலர், கங்கனாவை அடித்ததாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில், தான் பெண் காவலரே கங்கனாவை அடித்தது ஏன் என்று கூறியுள்ளார். கங்கனா ரணாவத்தை தாக்கியது தொடர்பாக பெண் காவலர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையும் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications