5 மாநில சட்டசபை தேர்தல்கள்: நவ.7 முதல் நவ.30 வரை எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை!
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல்கள் தொடங்கும் நவம்பர் 7-ந் தேதி முதல் தெலுங்கானா தேர்தல் நடைபெறும் நவம்பர் 30-ந் தேதி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மிசோரம், தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்கள் நவம்பர் 7-ந் தேதி தொடங்குகிறது.

5 மாநில தேர்தல் தேதிகள்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7, நவம்பர் 17
மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7
மத்திய பிரதேசம் நவம்பர் 17
ராஜஸ்தான் நவம்பர் 25
தெலுங்கானா நவம்பர் 30 ஆகிய நாட்களில் வாக்குப் பதிவு நடைபெறும். அனைத்து மாநில வாக்குகளும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த 5 மாநில தேர்தல் மிகவும் முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. ம.பியில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. மிசோரமில் பாஜக கூட்டணி கட்சியான மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடைபெறுகிறது. தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது.
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ராஜஸ்தான், ம.பி. மாநிலங்களில் வெல்வோம் என்கிற நம்பிக்கை உள்ளது. தெலுங்கானா, மிசோரமில் களத்திலேயே பாஜக இல்லை. சத்தீஸ்கரில் காங்கிரஸ்தான் வெல்லும் என்கின்றன கருத்து கணிப்புகள். ராஜஸ்தான், ம.பி. மாநிலங்களிலும் கூட முரண்பாடான கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 5 மாநில தேர்தல்களில் நவம்பர் 7-ந் தேதி காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குவதில் இருந்து நவம்பர் 30-ந் தேதி மாலை 6.30 மணிக்கு வாக்குப் பதிவுகள் முடியும் வரை அனைத்துவிதமான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அச்சு அல்லது காட்சி ஊடகங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை நவம்பர் 7 முதல் நவம்பர் 30 வரை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications