விடுதலை சிறுத்தை கேட்ட மோதிரம் சின்னம் இல்லை.. வேறு கட்சிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
Recommended Video

டெல்லி: விடுதலை சிறுத்தைகள் கேட்ட மோதிரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்யவில்லை.
திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்தச 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டது.

இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோதிரம் சின்னத்தையே ஒதுக்கக் கோரி டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 24-ஆம் தேதி மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் சின்னம் இல்லாத கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கீடு செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் அக்கட்சி கோரிய மோதிரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்யவில்லை.
மாறாக தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே அக்கட்சி புதிய சின்னத்தை கோருமா இல்லை ஏற்கெனவே போட்டியிட்ட நட்சத்திரம், மெழுகுவர்த்தி ஆகிய சின்னங்களை கோருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இல்லாவிட்டால் திமுக அறிவுறுத்தியபடி உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 39 தொகுதிகளிலும் தமிழ்நாடு இளைஞர் கட்சி போட்டியிடவுள்ளதாக மனு அளித்துள்ளது. அது போல் அக்கட்சியும் மோதிரம் சின்னத்தை கேட்டிருந்தது. ஆனால் விசிகவோ வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.
இதனால் அதிக தொகுதிகளில் போட்டியிடும் கட்சிக்கே மோதிரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications