டைம் ஓவர்.. ஜனவரி மாதமே சட்டசபை தேர்தலை அறிவிக்க போகும் தேர்தல் ஆணையம்.. ஏன் முக்கியம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. டிசம்பர் மாதம் இறுதிக்கட்ட ஆய்வுகள் நடக்கும் சூழலில் ஜனவரி மாதம் தேர்தல் தேதி வெளியாகும் என தெரிகிறது.

இந்தாண்டு தொடக்கத்தில் தான் தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் புதுச்சேரி, அசாமில் மட்டுமே ஆளும் தரப்பு வென்றது. மற்ற 3 மாநிலங்களிலும் ஆளும் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த தேர்தலை தொடர்ந்தே SIR விவகாரம் பெரிதாக வெடித்தது. SIR கூட தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என சொல்லப்பட்டது.

Election Commission SIR

தேர்தல்

இது தொடர்பாக ஒரு பக்கம் போராட்டங்கள் நடக்கும் சூழலில், இன்னொரு பக்கம் வழக்குகளும் நடந்து வருகிறது. இந்த சர்ச்சையே முடியாத நிலையில், தேர்தல் ஆணையம் அடுத்தகட்டமாக தேர்தல் நடத்தும் பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது. உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவிக்கும் என தெரிகிறது.

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களும் தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி மாதம்

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட அம்சங்களை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. முதற்கட்ட பணிகள் முடிந்த பிறகு, நவம்பர் கடைசி வாரம் அல்லது டிசம்பர் மாதம் தேர்தல் ஆணையர்கள் ஐந்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்வார்கள். அப்போது தேர்தல் முன்னேற்பாடுகள் ஆய்வு செய்யப்படும்.

ஆய்வு

தேர்தல் ஆணையர்கள் நேரடியாக செல்வதற்கு முன்பு துணை தேர்தல் ஆணையர்கள் 5 மாநிலங்களுக்கும் நேரில் சென்று தேர்தல் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவார்கள். பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் துணை தேர்தல் ஆணையர்கள் ஆய்வு ஏற்கெனவே முடிந்துவிட்டது. உத்தரப் பிரதேசத்தில் ஒரு கட்ட ஆய்வு நிறைவடைந்துள்ளது. மேலும் இரண்டு கட்ட ஆய்வுகள் நடைபெற உள்ளன. கோவாவில் இந்த ஆய்வு இன்னும் தொடங்கவில்லை. ஐந்து மாநிலங்களிலும் துணைத் தேர்தல் ஆணையர்கள் குழுவின் ஆய்வுகள் நவம்பர் இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து என்ன

ஐந்து மாநிலங்களிலும் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்துவது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும் பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளது. அதிக தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் மட்டும் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குப்பதிவு தேதிகள், எவ்வளவு கட்டங்களாக தேர்தலை நடத்துவது என்பது குறித்து தேர்தல் ஆணையமே இறுதி முடிவை எடுக்கும் அதன் பிறகே ஜனவரி மாதம் தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+