மூத்த தேர்தல் அதிகாரி மீது பறந்த புகார்கள்.. நடவடிக்கை எடுக்க மறுத்த கேபினட் செயலகம்.. பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தல் ஆணையம் தொடர்பாக கடந்த சில காலமாகவே தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகிறது. இதற்கிடையே இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவருக்கு எதிராக இரண்டு தேர்தல் ஆணையர்கள் புகார் அளித்திருந்ததாகவும் இருப்பினும் அந்த மூத்த அதிகாரி மீது எந்தவொரு நடவடிக்கையையும் மத்திய கேபினட் செயலகம் எடுக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் தொடர்பான விவகாரம் தான் இப்போது தேசியளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருந்தனர். இது ஒரு பக்கம் இருக்க இப்போது இன்னொரு சிக்கலும் கூட பெரிதாக வெடித்துள்ளது. அது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Election Commission election india

தேர்தல் ஆணையர்கள்

அதாவது தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் மூத்த துணை தேர்தல் ஆணையர் மணீஷ் கார்க் மீது தனித்தனியாக புகார் அளித்திருந்தனராம். ஆனால், இந்த கடிதங்கள் தேர்தல் ஆணையத்தின் ஒட்டுமொத்த அதிகாரப்பூர்வ கருத்தாக கருத முடியாது என்றும், அவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது அரசியலமைப்பு அமைப்பின் செயல்பாட்டில் தலையிடுவதாக பார்க்கப்படலாம் என்றும் கேபினட் செயலகம் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியான ஆவணங்கள் மூலம் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளது.

தனித்தனியாக கடிதம்

கடந்த ஜூலை 29ஆம் தேதி தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் கேபினட் செயலாளர் டி.வி. சோமநாதனுக்கு தனித்தனியாகக் கடிதம் எழுதியிருந்தனர். அதில் மூத்த துணை தேர்தல் ஆணையர் மணீஷ் கார்க்கின் செயல்பாடுகள் குறித்து கவலை தெரிவித்திருந்தனர். துணை தேர்தல் ஆணையராக கார்க் பொறுப்பை ஏற்ற பிறகு, மூத்த துணை தேர்தல் ஆணையர்கள், துணை தேர்தல் ஆணையர்கள், இயக்குநர் ஜெனரல்கள் மற்றும் அதற்கு இணையான பதவிகளில் உள்ள அதிகாரிகளுக்கு இடையிலான பணிகளை கார்க் மாற்றியமைத்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த மாற்றங்கள் குறித்து தேர்தல் ஆணையத்துடனோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனோ முன்கூட்டியே ஆலோசிக்கவில்லை என்றும் இதுபோன்ற முடிவுகளை எடுப்பதற்கு முன் ஆணையத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும், நிர்வாக பிரிவு தொடர்பான கோப்பை கேட்டபோது கூட அதை தனக்கு வழங்கவில்லை என விவேக் ஜோஷி குற்றம்சாட்டியதாகவும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை நடைமுறைகளுக்கு எதிரானவை என்றும் 2023 சட்ட விதிகளை மீறுவதாகவும் இருப்பதாக இருவரும் தெரிவித்தனர்.

தகவல் அறியும் உரிமை சட்டம்

ஓய்வுபெற்ற கமாண்டர் லோகேஷ் கே. பத்ரா என்பவர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தான் இந்த தகவல்கள் தெரிய வந்திருக்கிறது. அந்த தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு பதிலளித்த கேபினட் செயலகம், இரு தேர்தல் ஆணையர்களின் கடிதங்களையும் தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும் என்றாலும், அவற்றை தேர்தல் ஆணையத்தின் ஒட்டுமொத்த அதிகாரப்பூர்வக் கடிதங்களாக கருத முடியாது எனக் குறிப்பிட்டது.

தேர்தல் ஆணையம் ஓர் அரசியலமைப்பு அமைப்பு என்றும் அது அரசின் நிர்வாக தலையீடுகளிலிருந்து சுதந்திரமாக செயல்படுவதற்கான பாதுகாப்புகள் உள்ளன என்றும் செயலகம் தெரிவித்தது. 2023 சட்டப்படி, தேர்தல் ஆணையத்தின் பணிகள் முடிந்தவரை ஒருமித்த கருத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் பெரும்பான்மை அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டது.

நடவடிக்கை எடுக்க மறுப்பு

தேர்தல் ஆணையர்களின் கடிதங்களை ஆகஸ்ட் 5ஆம் தேதி பெற்று கொண்டது உண்மை தான் என உறுதி செய்த கேபினட் செயலகம், அதன் நகல்களை பணியாளர் மற்றும் பயிற்சி துறை, நியமன அதிகாரி மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பியதாம். கார்க் விவகாரம் குறித்து பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே இரு தேர்தல் ஆணையர்களின் அறிவுறுத்தலுக்கு பிறகு கார்க் பிறப்பித்த பணிப் பகிர்வு உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இது தொடர்பாக இன்னும் தெளிவான ஒரு விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தின் பின்னணி மற்றும் ஆணையத்துக்குள் புகார்கள் விவாதிக்கப்பட்டனவா என்பது குறித்து தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார். அரசியல் ஆய்வாளர் யோகேந்திர யாதவும், முழு ஆணையத்தின் கூட்டத்தை கூட்டாமல் கேபினட் செயலாளரை அணுகியது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+