கொளுத்தும் வெயிலில் பிரசாரக் கூட்டங்கள் கூடாது.. அரசியல் கட்சிகளுக்கு அதிரடி உத்தரவு
Recommended Video

டெல்லி: கொளுத்தும் வெயிலில் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல் என ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை தொடங்கிவிட்டன. தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டுவிட்டன.
இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

முறையீடு
அதில் அவர் கூறுகையில், தற்போது நிலவி வரும் கடுமையான கோடை வெயில் நேரத்தில், பிற்பகலிலும் பகல் நேரத்திலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுவதால் தங்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக சில அமைப்புகளிடம் இருந்தும், குடிமக்கள் குழுக்களிடம் இருந்தும் முறையீடுகள் வந்துள்ளன.

தவிர்க்க வேண்டியது
இது போன்ற கூட்டங்களில் கடந்த காலங்களில் வெப்பம் தாங்காமல் சிலர் உயிரிழந்திருப்பதும் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எல்லா அரசியல் கட்சிகளும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், கோடை காலத்தில் வெயில் நேரத்தில் பொதுக்கூட்டங்களை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

ஆபத்து
பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் நிழல் தரும் கூரை, குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்றவை செய்யப்பட வேண்டும்.
அவ்வாறு செய்து கொடுத்தால் தான் கடினமான சூழ்நிலைகள் ஏற்படும்போது யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

பிரச்சாரம்
எனவே மேற்கண்ட ஆலோசனைகளை அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அனைவரும் பின்பற்றி பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த தேர்தலின் போது நடத்தப்பட்ட பிரச்சாரக் கூட்டங்களில் வெப்பம் தாங்காமல் சிலர் உயிரிழந்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, இந்த நடவடிக்கையை எடுப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications