தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம்.. 5 மாநிலங்களில் தேர்தல்கள் எப்போது? முழு விவரம்
டெல்லி: தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று மாலை வெளியிடப்பட்டது.
டெல்லியில் மாலை 4.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா. அப்போது இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
கடந்த இரண்டு மாதங்களாக ஐந்து மாநிலங்களிலும் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்து கொண்டிருந்தது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள, தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு, சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் குழு விசிட் செய்தது. அப்போது, மாநில தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழகத்தை பொறுத்தளவில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி 2 நாட்களுக்குள் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்பது பெரும்பான்மையான கட்சிகளின் கோரிக்கையாக இருந்தது.
ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்பதாலும், மே மாதம், 12ம் வகுப்புக்கான தேர்வு நடைபெறும். இதை கருத்தில் வைத்து தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று தமிழ அரசியல் கட்சிகள் கோரிக்கைவிடுத்திருந்தன.
இன்று மாலை நிருபர்களிடம் பேசிய சுனில் அரோரா கூறியதாவது:

தமிழகம், புதுச்சேரி
தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 6ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும். மார்ச் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19ம் தேதி. வேட்புமனு பரிசீலனை மார்ச் 20ம் தேதி நடைபெறும். வேட்புமனு வாபஸ் பெற மார்ச் 22ம் தேதி கடைசி நாளாகும். ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 5 மாநிலங்களிலும், மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 5 மாநிலங்களிலும், மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

கேரளா நிலவரம்
கேரளா சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும். கேரளாவில் மார்ச் 12ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். வேட்பு மனுக்கள் பரிசீலனை - மார்ச் 20; வேட்பு மனுக்கள் வாபஸ் வாங்க கடைசி நாள் - மார்ச் 22, வாக்குப் பதிவு நாள்- ஏப்ரல் 6, வாக்கு எண்ணிக்கை- மே 2.

அசாம் தேர்தல்
அசாம் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. கட்டம் 1: (47 சீட்கள்) மார்ச் 27ம் தேதி வாக்குப் பதிவு நடக்கும். கட்டம் 2: (39 சீட்கள்) ஏப்ரல் 1ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். கட்டம் 3: (40 சீட்கள்) ஏப்ரல் 6ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.

மேற்கு வங்கம் தேர்தல்
மேற்கு வங்கத்தில், 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 27ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏப்ரல் 1ம் தேதி 2வது கட்ட வாக்குப்பதிவு, ஏப்ரல் 6ம் தேதி 3வது கட்டம், ஏப்ரல் 10ம் தேதி 4ம் கட்டம், ஏப்ரல் 17ம் தேதி 5வது கட்டம், ஏப்ரல் 22ம் தேதி 6வது கட்டம், ஏப்ரல் 26ம் தேதி 7வது கட்டம், ஏப்ரல் 29ம் தேதி 9வது கட்ட தேர்தல்கள் நடைபெறுகின்றன. இதனால்தான் தமிழக வாக்கு எண்ணிக்கையும், மே 2ம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளது. தமிழகத்தில் இவ்வளவு தாமதமாக வாக்கு எண்ணப்பட்டது இல்லை என்று கூறப்படுகிறது.
-
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!












Click it and Unblock the Notifications