தேர்தல் பிரசாரத்தில் மத ரீதியிலோ, தனிப்பட்ட முறையிலோ விமர்சிக்க கூடாது.. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
டெல்லி: மத ரீதியிலான அல்லது தனிப்பட்ட முறையிலான விமர்சனங்களை பிரச்சாரமாக செய்ய கூடாது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் வரும் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி மக்களவை தேர்தலுக்கான தேதியை அறிவிக்க இன்று மதியம் 3 மணிக்கு தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் கூறுகையில் லோக்சபா தேர்தலுக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார். லோக்சபா தேர்தலை நடத்த முழு அளவில் தயாராக உள்ளோம். இந்த ஆண்டின் மிக முக்கியமான செய்தியாளர் சந்திப்பு இதுதான்.
ட்ரோன்கள் மூலம் மாநில எல்லைகள் கண்காணிக்கப்படும். தேர்தலில் முடிந்த வரை வன்முறையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சில மாநிலங்களில் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தேர்தலில் பணம் பிரதான பொருளாக உள்ளது. வாக்கிற்கு பணம் பெறுவதும், கொடுப்பதும் குற்றம் ஆகும்.
நகை, சேலை என எந்த இலவச பொருட்கள் கொடுப்பது குற்றமே. வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும். ஜாதி, மத ரீதியாக விமர்சித்து தேர்தலில் பிரச்சாரம் செய்யக்கூடாது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை தொடர்பாக கண்காணிக்கப்படும்.
விளம்பரங்களை எல்லாம் நம்பத்தகுந்த செய்திகளாக்கக் கூடாது. தேர்தல் பணிகளுக்கு சிறார்களை பயன்படுத்தக் கூடாது, மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்த கூடாது. அரசியல் கட்சிகளும் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க கூடாது. நட்சத்திர பேச்சாளர்களும் நாகரீகமாக பேச வேண்டும். சிவப்பு கோட்டை எப்போதும் தாண்டவே கூடாது. இவ்வாறு ராஜீவ் குமார்.












Click it and Unblock the Notifications