உச்சகட்டத்தில் தேர்தல் ஃபீவர்.. கைகோர்த்த பிரசார் பாரதி - கூகுள்.. யூ டியூபில் வாக்கு எண்ணிக்கை லைவ்
டெல்லி: மக்களவை தேர்தல் ஃபீவர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை வெளியாக உள்ள வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை லைவ்வாக ஒளிபரப்ப யூ டியூபில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை வெளியாக உள்ள இந்திய மக்களவை தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள உலகமே ஆவலாக உள்ளது. பிரமராக மீண்டும் மோடி அரியணை ஏறுவாரா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் எழுந்துள்ளது. வாக்கு எண்ணிக்கையை அடுத்து சர்வதேசத்தின் பார்வை முழுவதும் நாளை நம் நாட்டின் மீதே இருக்கும்.

இந்நிலையில் மக்களவை தேர்தல் முடிவுகளை அறியும் வகையில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக பிரசார் பாரதியும், கூகுளும் இணைந்து செயல்பட உள்ளன. பிரசார் பாரதி மற்றும் கூகுள் இணைந்து நாளை வெளியாக உள்ள மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை, யூடியூபில் நேரலை செய்ய இருக்கின்றன.
வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை மக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், நாட்டின் எந்த பகுதியிலிருந்து யூ டியூப் தளத்திற்கு சென்றாலும் அதன் முகப்பு பகுதியில் டி.டி. நியூஸ் வழங்கும் தேர்தல் முடிவுகள் இடம்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யூ டியூப் இணையதளம் மற்றும் மொபைல் செயலி என இரண்டிலுமே தேர்தல் முடிவுகள் நேரலை செய்யப்பட உள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்த விவரங்களை வெவ்வேறு மொழிகளில் டிஜிட்டல் முறையில் வழங்க தூர்தர்ஷன் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை யூ டியூபின் முகப்பு பகுதியில் தோன்றும் ஆப்ஷனை க்ளிக் செய்தால், அது நம்மை டி.டி. நியூஸின் யூ டியூப் சேனல் பக்கத்திற்கு தானே இட்டு செல்லும். இதுதவிர டி.டி. சேவை கிடைக்கும் 14 இதர மொழிகளிலுமே மக்களவை வாக்கு எண்ணிக்கை குறித்த விவரங்களை நேரலையாக பார்க்க முடியும் என்பது கூடுதல் தகவல்.
இந்த சேவையின் போது வழங்கப்பட உள்ள விவரங்கள் அனைத்தும் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என பிரசார் பாரதி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications