லோக்சபா வாக்கு எண்ணிக்கை ஓவர்.. பாஜக, காங்கிரஸ் கூட்டணியில் எந்த கட்சி எத்தனை இடங்களை பெற்றுள்ளன
டெல்லி: மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் இப்போது எந்தக் கட்சி எத்தனை இடங்களைப் பெற்றுள்ளன. ஆளும் பாஜகவுக்கு எத்தனை இடம்.. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு எத்தனை இடம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த இரண்டு தேர்தல்களைப் போல இல்லாமல் இந்த முறை பாஜக உட்பட எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனால் கடந்த காலங்களைப் போல மீண்டும் கூட்டணி அரசே மத்தியில் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் இந்த முறை எந்தக் கட்சி எத்தனை இடங்களில் வென்றுள்ளன என்பது குறித்துப் பார்க்கலாம்.
பாஜக: நமது நாட்டில் மொத்தம் 543 தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் ஒரு தொகுதி அதாவது சூரத் தொகுதியை பாஜக ஏற்கனவே கைப்பற்றி இருந்தது. அங்குப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மற்ற வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் அங்கு பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றது.
இதையடுத்து மீதமுள்ள 542 தொகுதிகளில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடந்தது. வாக்கு எண்ணிக்கை இப்போது நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.
ஷாக் எங்கே: இந்தி ஹார்ட்லேண்ட் பகுதியில் பாஜகவுக்கு அதிர்ச்சி தரும் முடிவுகள் கிடைத்ததால் பாஜகவால் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க முடியவில்லை. இருப்பினும், தற்போதுள்ள என்டிஏ கூட்டணி அப்படியே தொடர்ந்தால் பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியை ஏற்பது உறுதியாகும்.
இந்த லோக்சபா தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களை விடக் குறைவு என்பதால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாஜக கடந்த முறை 303 இடங்களில் வென்ற நிலையில், இந்த முறை சுமார் 60 இடங்களை இழந்துள்ளது.
பாஜக கூட்டணி: பாஜக கூட்டணிக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் பீகாரில் நல்ல செய்தி கிடைத்துள்ளது. ஆந்திராவில் என்டிஏ கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் 16 இடங்களில் வென்றுள்ள நிலையில், பீகாரில் நிதிஷ் குமாரின் ஜேடியு 12 இடங்களில் வென்றது. இந்த இரு கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜகவால் ஆட்சியை அமைக்க முடியும். மேலும், ஷிண்டே சிவசேனா 7 தொகுதிகளையும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 5 சீட்களையும் வென்றுள்ளது. இவை தவிர ஜேடிஎஸ், ராஷ்ட்ரிய லோக் தளம் தலா இரண்டு இடங்களில் வென்றன.
இந்தியா கூட்டணி: மறுபுறம் காங்கிரஸ் கடந்த 2019இல் வென்ற 52 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில், இந்த முறை 99 இடங்களை வென்றது.. குறிப்பாக மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் காங்கிரஸ் நல்ல வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்தியா கூட்டணியில் சமாஜ்வாதி கட்சி 37 இடங்கள், திரிணாமுல் காங்கிரஸ் 29 இடங்கள், திமுக 22 இடங்கள், தாக்கரே சிவசேனா 9 இடங்கள், சரத் பவார் என்சிபி 8 இடங்கள், ஆர்ஜேடி 4 இடங்கள், சிபிஎம் 4 இடங்கள், IUML மற்றும் ஆம் ஆத்மி, ஜார்க்ண்ட் முக்தி மோர்ச்சா தலா 3 இடங்கள், விசிக மற்றும் சிபிஐ, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தலா 2 இடங்களில் வென்றுள்ளன.
-
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு












Click it and Unblock the Notifications