Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய நிறுவனத்திற்கு வேலைக்கு போறீங்களா? இனி பிஎஃப் கணக்கை மாற்றுவது செம ஈஸி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்புநிதி கணக்கு வைத்திருப்போர் புதிய வேலைக்கு மாறும்போது பழைய அல்லது புதிய நிறுவனத்தின் உதவியின்றி பிஎஃப் கணக்கை தாங்களே மாற்றிக் கொள்ளலாம் என EPFO அறிவித்துள்ளது.

இபிஎஃப்ஓ எனப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் ஊழியர் மற்றும் முதலாளி இருவரும் பணியாளரின் அடிப்படை ஊதியத்தில் தலா 12 சதவீதம் தொகையை பிஎஃப் கணக்கில் செலுத்துகிறர்கள். முதலாளியால் செலுத்தப்படும் 12 சதவீதத்தில் 8.33 சதவீதம் ஓய்வூதிய கணக்கிலும் மீதமுள்ள 3.67 சதவீதம் பிஎஃப் கணக்கிலும் டெபாசிட் செய்யப்படுகிறது.

epfo pf

இதன் மூலம் அடிப்படை ஊதியத்தில் இருந்து 24 சதவீதம் தொகையானது மாதாமாதம் பிஎஃப் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதற்காக அரசும் ஆண்டு முடிவில் வட்டியை வழங்குகிறது. பணியாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து ஓய்வு பெறும் போது ஊழியர் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை மொத்தமாகவே பெறுகிறார். அதில் சம்பாதித்த வட்டியும் அடங்கும்.

அதற்கு வரி விலக்கும் உண்டு. இபிஎஃப்ஓ உறுப்பினர் சேமிப்புடன் காப்பீட்டுத் தொகை, ஓய்வூதியம், வரியில்லா வட்டி வருமானம் ஆகியவற்றையும் பெறுகிறார். மேலும் அவசர காலங்களில் இந்த நிதியிலிருந்து பணத்தையும் எடுக்கலாம். நீங்கள் வேறு வேலைக்கு செல்வதானால், உங்கள் பழைய அல்லது புதிய நிறுவனத்தில் இருந்து பிஎஃப் கணக்கை மாற்ற எந்த படிவத்தையும் நிரப்ப தேவையில்லை, அந்த நிறுவனத்தின் ஒப்புதலும் அவசியம் இல்லை.

இதுகுறித்து ஜனவரி 15 ஆம் தேதி இபிஎஃப்ஓ வெளியிட்ட சுற்றறிக்கையின்படி பிஎஃப் கணக்கை மாற்றுவதற்கு பழைய அல்லது புதிய நிறுவனங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தேவையில்லை. இப்போது சந்தாதாரர்கள் தங்கள் கணக்கை மாற்றிக் கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+