"ஆபரேஷன் தானே? முடிச்சுட்டு ஹாஸ்பிட்டலில் இருந்து லாகின் பண்ணுங்க!" மேனேஜர் பேச்சால் அதிர்ந்த பெண்
டெல்லி: இந்த காலத்தில் ஒர்க்- லைஃப் பேலன்ஸ் கோரி பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால், உண்மையில் பலருக்கும் நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளும் கூட கிடைப்பதில்லை. அப்படி தான் இங்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆபரேஷன் முடிந்த நாளிலேயே மேனேஜர் ஒருவர் வேலைக்குத் திரும்பும்படி பெண் ஊழியரைக் கட்டாயப்படுத்தியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களிலும் இன்னுமே கூட தொழிலாளர்கள் உரிமை மறுக்கப்பட்டே வருகிறது. நியாயமாகக் கிடைக்கும் உரிமைகளும் கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் பெரும் சிரமத்தையே எதிர்கொள்கிறார்கள். அப்படியொரு சம்பவத்தின் தகவல்கள் தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

மருத்துவமனையில் இருந்தபடி
அறுவை சிகிச்சை முடிந்த கையோடு, மருத்துவமனையில் இருந்தபடியே மேனேஜர் ஒருவர் வேலை செய்யச் சொல்லி இருக்கிறார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் முழு ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், அதையும் தாண்டி மேனேஜர் மருத்துவமனை பெட்டில் இருந்தபடியே வேலை செய்யச் சொன்ன சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மேனேஜர் தனக்கு அனுப்பிய தகவல்களைப் பெண் ஊழியர் தனது ரெட்டிட் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஆபரேஷன் இருப்பதால் 15 நாட்கள் விடுப்பு எடுத்துள்ளார். அப்படி இருந்த போதிலும், வேலை செய்யும்படி அந்த மேனேஜர் கட்டாயப்படுத்தியுள்ளார். மேனேஜர் உடன் நடந்த வாட்ஸ்அப் உரையாடல் குறத்தை ஸ்கிரீன்ஷாட்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
லீவ்
பல ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் இதற்கு முன்பு இவ்வளவு நாட்கள் தொடர்ச்சியாக விடுப்பு எடுத்ததே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும், "நான் இதற்கு முன்பு 3 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக விடுப்பு எடுத்ததே இல்லை.. அறுவை சிகிச்சைக்கு முன் 3 முதல் 4 மாதங்கள் வரை கடுமையான வலி இருந்தது. பல மருந்துகளை எடுத்துப் பார்த்தும் பலன் இல்லை. ஆபரேஷன் மட்டுமே ஒரு வழி என மருத்துவர் கூறினார்.
அப்போதும் கூட சீசன் சமயத்தில் ஆபரேஷன் செய்தால் அலுவலகத்திற்குச் சிக்கல் வரும் என்பதால் சீசன் இல்லாத தேதிகளில் ஆபரேஷன் செய்யத் திட்டமிட்டேன். மேலும், விடுப்பு கிடைத்த பிறகும் கூட.. சக ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இரவு நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் கூட வேலை செய்தேன். எல்லாவற்றையும் முடித்துவிட்டே லீவ் எடுத்தேன்.
ஆபரேஷன் முடிந்த உடனே
ஆனால், அறுவை சிகிச்சை நடந்த அன்றே எனது மேனேஜர் கால் செய்தார். அப்போது நான் மயக்க மருந்தில் இருந்தேன்.. என் போன் என்னுடன் இல்லை.. அதனால் மறுநாள் பேசினேன்... 3வது நாளில் இருந்தே படுக்கையில் இருந்து வேலை செய்யும்படி சொன்னார்.. 15 நாட்கள் லீவ் இருந்த போதிலும், ஏழாவது நாளே எப்போது வேலைக்குத் திரும்ப முடியும் என்று கேட்க ஆரம்பித்தார்.
புலம்பல்
நான் எனது டிஸ்சார்ஜ் ஆவணங்கள், மருத்துவரின் பரிந்துரை என அனைத்தையும் அவருக்கு அனுப்பினேன். அப்படியிருந்தும் அவரால் எப்படிப் படுக்கையில் இருந்து வேலை செய்யச் சொல்ல முடிந்தது! ஆபரேஷன் முடித்தவுடனே இப்படிச் சொல்ல எப்படி தான் அவருக்கு மனசு வந்ததோ" என்று அவர் புலம்பித் தள்ளி இருக்கிறார். அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு இதேபோல ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications