ஏடிஎம் மூலம் பிஎஃப் பணம்.. மாதசம்பளம் வாங்குவோருக்கு மத்திய அரசு தீபாவளி பரிசு.. சூப்பர் திட்டம்
டெல்லி : வருங்கால வைப்பு நிதி கணக்கை, யு.பி.ஐ. எண்ணுடன் இணைத்து வங்கிக்கணக்கில் நேரடியாகவும் பணத்தை வரவு வைத்துக்கொள்ளும் வசதியும் அறிமுகமாக இருக்கிறது. இந்த திட்டப்படி வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை எளிதாக எடுக்கலாம். அதேபோல் ஏ.டி.எம். மூலமும் பணத்தை எடுக்க முடியும் என்கிற வசதி அடுத்த மாதம் வரப்போகிறது. அதாவது வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை ஏ.டி.எம். மூலம் எடுக்கும் வசதி தீபாவளியை முன்னிட்டு அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறதாம்.
மத்திய அரசு பணியாளர் நலனுக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இதில், தொழிலாளர்களின் மாத ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை அவர்கள் பணியாற்றும் நிறுவனமும், தொழிலாளர்களும் செலுத்தி வருகிறார்கள்.

உதாரணமாக உங்களுக்கு 1800 ரூபாய் பிடிக்கிறார்கள் என்றால், அதே தொகையை நிறுவனமும் செலுத்த வேண்டும். 550 பிடிக்கிறார்கள் என்றால், அதே தொகையை நிறுவனமும் செலுத்த வேண்டும். இதன்படி நாடு முழுவதும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 8 கோடிக்கும் அதிகமானோர் சந்தாதாரர்களாக இருக்கிறார்கள்.
பிஎஃப் பணம் இப்போது நடைமுறை என்ன
வருங்கால வைப்பு நிதியில் (EPF) உள்ள பி.எஃப். தொகையை ஊழியர்களின் தேவைக்கேற்ப அவசரத் தேவைகளுக்காக ஆன்லைன் மூலம் எடுக்கும் வசதி தற்போது உள்ளது. அவசர மருத்துவச் செலவு (எத்தனை முறை வேண்டுமானாலும்), திருமணம், வீட்டுக் கடன் செலுத்துதல்,
வீடு கட்டுதல் அல்லது வாங்குதல், கல்விச் செலவுகள் போன்றவற்றிக்கு பணத்தை எடுக்கலாம். இதற்கு அவர்கள் பி.எஃப். கணக்கு ஆதார் எண்ணுடன் இணைத்திருக்க வேண்டும். மேலும், நிறைய பிஎஃப் கணக்குகள் இருந்தால், எல்லா பணமும், ஒரே பிஎஃப் கணக்கிற்கு வர வேண்டும். அப்படி இருந்தால் தாரளாமாக பணம் எடுக்க முடியும். இதுதான் தற்போது உள்ள நடைமுறையாகும்.
அடுத்த மாதம் அமல்
அதேநேரம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தனது சந்தாதாரர்களுக்கு தற்போது வழங்கி வரும் டிஜிட்டல் சேவையை மேலும் நவீன அம்சங்களுடன் அடிக்கடி மேம்படுத்தி வருகிறது. அதன்படி, வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்களது கணக்கில் உள்ள பணத்தை ஏ.டி.எம். எந்திரத்தின் மூலமாக எடுக்கும் வசதி அடுத்த மாதம் அமல்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏடிஎம் மூலம் பிஎஃப் பணம்
இதேபோல வருங்கால வைப்பு நிதி கணக்கை, யு.பி.ஐ. எண்ணுடன் இணைத்து வங்கிக்கணக்கில் நேரடியாகவும் பணத்தை வரவு வைத்துக்கொள்ளும் வசதியும் அறிமுகமாக இருக்கிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 10, 11-ந்தேதிகளில் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள்












Click it and Unblock the Notifications