ஆஹா.. ஒரே வார்த்தை சொன்ன கெஜ்ரிவால்.. "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" குறித்து நச் பதிலடி.. செம டென்ஷனில் பாஜக
தி காஷ்மீர் பைல்ஸ் படம் வரிவிலக்கு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்துள்ளார்
டெல்லி: "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படத்துக்கு டெல்லியிலும் வரிவிலக்கு தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட, அதற்கு சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் நச் பதிலடி தந்துள்ளார்.. இதை கேட்டு பாஜக தரப்பு டென்ஷனாகி உள்ளது.
"தி காஷ்மீர் ஃபைல்ஸ்" என்ற இந்தி திரைப்படம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் இயக்கத்தில் கடந்த 11-ம் தேதி வெளியாகியது இந்த படம்.
காஷ்மீரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது... இந்தத் திரைப்படத்துக்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர வந்துகொண்டிருக்கிறது... இந்த படத்தை பாஜக தரப்பு தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் என்ன?

இதுதான் படத்தின் கதை:
காஷ்மீரில் 1990-ம் ஆண்டுகளில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன.. இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என்று பயங்கரவாதிகள் அப்பேதாது பகிரங்க எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.. அதேபோல், காஷ்மீரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கு மூலமாகவும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.. இந்த பயங்கரவாத தாக்குதல்கள், எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீரில் இருந்து லட்சக்கணக்கான பண்டிட்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் பல்வேறு இடங்களில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்...

தாக்குதல்கள்
இப்படி 1990-களில் காஷ்மீரில் நடைபெற்ற பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்களைதான் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. எனவே, உத்தரப்பிரதேசம், திரிபுரா, கோவா, ஹரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தப் படத்துக்கு கேளிக்கை வரிவிலக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன... அந்த வகையில், நடந்துவரும் சட்டசபைக் கூட்டத் தொடரில் இந்த படத்திற்கு டெல்லியிலும் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரவிந்த் கெஜ்ரிவால்
இதற்கு டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்து பேசினார்.. அப்போது, "இன்னைக்கு பாஜகவினர் இந்த படத்துக்காக தெரு தெருவாக போஸ்டர்களை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. இப்படி போஸ்டர் ஒட்டுவதற்குதான் நீங்க அரசியலுக்கு வந்தீங்களா? ஒரு நாட்டின் பிரதமர், நாட்டை வருடக்கணக்கில் ஆட்சிசெய்துவிட்டு, கடைசியில் விவேக் அக்னிஹோத்ரியின் பாதங்களில் தஞ்சமடைகிறார் என்றால் என்ன அர்த்தம்? அவர் தன்னுடைய பதவிக் காலத்தில் வேற எதையுமே செய்யவில்லை என்பதே அர்த்தம்.

ஆர்வம்
இந்த படத்துக்கு வரிவிலக்கு செய்யுங்கள் என்று பாஜகவினர் சொல்கிறார்களே. அப்படி இந்த படம் எல்லாருக்கும் சென்றடைய வேண்டும் என்று விரும்பினால், அவ்வளவு ஆர்வமாக இருந்தால், படத்தின் டைரக்டர் விவேக் அக்னிஹோத்ரியை யூடியூப்பில் போட சொல்லுங்கள்... அப்போது எல்லாருமே இலவசமாக பார்க்க முடியும்.. இதற்கு வரிவிலக்கு வேண்டும் என ஏன் விரும்புகிறீர்கள்? யூடியூபில் போட்டால் ஒரே நாளில் எல்லாரும் பார்ப்பார்களே" என்றார் அரவிந்த் கெஜ்ரிவால்.
-
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம் -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி












Click it and Unblock the Notifications