இது சீட்டாவா?.. கர்ஜிக்காமல் ஏன் பூனை மாதிரி கத்துது.. வீடியோவுடன் சந்தேகம் கிளப்பிய அகிலேஷ் யாதவ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமீபியா நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சீட்டாக்களை(சிறுத்தைப்புலி) பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது பிறந்தநாளில் உத்தர பிரதேசம் குனோ தேசிய பூங்காவில் திறந்து விட்டார். இந்நிலையில் தான் இது சீட்டாவா... அப்புறம் ஏன் பூனை மாதிரிது கத்துது எனக்கூறி வீடியோ வெளியிட்டு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.

இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பு அதிகளவில் சிறுத்தைகள் இருந்தன. சீட்டாக்கள் எனப்படும் சிறுத்தைப்புலி உள்ளிட்ட அனைத்தும் வேட்டையாடப்பட்டன. இதனால் நாளடைவில் சீட்டாக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.

சத்தீஷ்கரில் 1947ல் ஒரு சீட்டா இருந்தது. அதன்பிறகு அதுவும் இறந்தது. இதனால் இந்தியாவில் சீட்டா இனம் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக 1952ல் அறிவிக்கப்பட்டது.

நமீபியாவில் இருந்து 8 சீட்டாக்கள்

நமீபியாவில் இருந்து 8 சீட்டாக்கள்

இதையடுத்து நமீபியாவிடம் இருந்து இந்தியாவுக்கு சீட்டாக்கள் கொண்டு வர ஒப்பந்தம் செய்யபட்டது. அதன்படி இன்று 8 சீட்டாக்கள் இந்தியாவுக்கு வழங்க நமீபியா ஒப்புக்கொண்டது. பி747 எனும் சிறப்பு சரக்கு விமானம் மூலம் நமீபியாவில் இருந்து 5 ஆண், 3 பெண் என மொத்தம் 8 சீட்டாக்கள் இந்தியா கொண்டு வரப்பட்டன.

திறந்து விட்ட பிரதமர் மோடி

திறந்து விட்ட பிரதமர் மோடி

நேற்று 72வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட சீட்டாக்களை மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் திறந்து விட்டார். இதன்மூலம் சீட்டா வரை சிறுத்தைப்புலி இந்தியாவுக்கு 70 ஆண்டுகளுக்கு பிறகு கால்பதித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சீட்டாக்கள் தொடர்பான வீடியோ, படங்கள் அதிகளவில் வெளியாகி இணையதளத்தை ஆக்கிரமித்தன. இதற்கு பலர் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸின் வாதம்

காங்கிரஸின் வாதம்

இந்தியாவில் சீட்டாக்களை கொண்டு வந்ததை பலர் பாராட்டுகின்றனர். மேலும் சீட்டாக்களை முறையாக கண்காணிக்க வேண்டும் என அட்வைஸ் கொடுத்து வருகின்றனர். இதிலும் அரசியல் கட்சியினர் அரசியல் செய்ய துவங்கி உள்ளனர். இந்தியாவுக்கு சீட்டாக்களை கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் என்பது காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்டது என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ்-பாஜக இடையே ஒருபுறம் விவாதம் நடந்து வருகிறது.

அகிலேஷ் யாதவ் கிண்டல்

அகிலேஷ் யாதவ் கிண்டல்

இதற்கு மத்தியில் தான் உத்தர பிரதேச முன்னாள் முதல் அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி (அகிலேஷ் யாதவ்) தலைவருமான அகிலேஷ் யாதவ் கிண்டல் செய்துள்ளார். அதாவது நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சீட்டா தொடர்பான வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் உள்ள சீட்டா சத்தம் எழுப்புகிறது. இதனை தான் அவர் கிண்டல் செய்துள்ளார். அதில், ‛‛அனைவரும் சீட்டாவின் கர்ஜனைக்காக காத்திருந்தனர். ஆனால் அது பூனையை போல் கத்துகிறது'' என குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+