Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிஎஸ்எஃப் காவலர் பணியிடங்களில்.. அக்னி வீரர்களுக்கு இடஒதுக்கீடு 50% ஆக உயர்வு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய துணை ராணுவப் படையான எல்லை பாதுகாப்புப் படையில் (BSF), காவலர் பணிக்கான முன்னாள் அக்னி வீரர்களுக்கான இடஒதுக்கீடு 10 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு மூலம் இந்த முக்கிய மாற்றம் அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நேற்றிரவு வெளியானது.

BSF Agniveer

"எல்லை பாதுகாப்புப் படை, பொதுப் பணிப் பிரிவு (பத்திரிகை சாராத) ஆட்சேர்ப்பு விதிகள், 2015-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டதன் மூலம் 50% இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முன்னாள் அக்னி வீரர்கள் உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வுகள் அனைத்திலிருந்தும் விலக்கு பெறுவார்கள்" என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டதும் முன்னாள் அக்னி வீரர்களுக்குக் கிடைக்கும் மற்றொரு முக்கியமான சலுகையாகும். அதன்படி, அக்னி வீரர் திட்டத்தின் முதல் தொகுதிக்கு 5 ஆண்டுகள் வரையிலும், மற்ற முன்னாள் அக்னி வீரர்களுக்கு 3 ஆண்டுகள் வரையிலும் அதிகபட்ச வயது வரம்பு தளர்வு வழங்கப்படும். இது பலருக்குப் பயன்தரும் என்று சொல்லப்படுகிறது.

இந்த நேரடி ஆட்சேர்ப்பு முறையில், ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்படும் காலிப்பணியிடங்களில் 50 சதவீதம் முன்னாள் அக்னி வீரர்களுக்கும், 10 சதவீதம் முன்னாள் படைவீரர்களுக்கும் ஒதுக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், போரிடும் பிரிவின் காவலர் (Tradesmen) பணியிடங்களில் ஆண்டு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு 3 சதவீதம் வரை ஒதுக்கீடு வழங்கப்படும், என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்சேர்ப்பு 2 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில், அக்னி வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட 50 சதவீத காலிப்பணியிடங்களுக்கு நோடல் படை மூலம் ஆட்சேர்ப்பு நடத்தப்படும். இரண்டாவது கட்டத்தில், முன்னாள் அக்னி வீரர்கள் அல்லாத மற்ற விண்ணப்பதாரர்களுக்கான மீதமுள்ள 47 சதவீத காலிப்பணியிடங்களுக்கு (10% முன்னாள் படை வீரர்கள் உட்பட) பணியாளர் தேர்வு ஆணையத்தால் ஆட்சேர்ப்பு நடத்தப்படும். முதல் கட்டத்தில் நிரப்பப்படாத அக்னி வீரர் இடங்களும் இதில் சேர்க்கப்படும்.

அக்னி வீரர் என்பவர்கள் யார்?

இந்திய ஆயுதப்படையில் ஒப்பந்த அடிப்படையிலான பணிகள் கொண்டுவரப்பட்டன. அதாவது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் இந்த ஒப்பந்த பணிகள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, புதியதாக பணியில் சேர்பவர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் நிரந்தர பணியாளர்கள் அல்ல. 4 ஆண்டுகள் வரை ஒப்பந்தத்தில் வேலை செய்வார்கள். இவர்களுக்கு, முதல் 6 மாதம் பயிற்சி வழங்கப்படும்.

4 ஆண்டுகள் பணி நிறைவடைந்ததும், வெறும் 25% அக்னி வீரர்கள் மட்டும் பணிக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள். மற்ற 75% வீரர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். இப்படி வெளியே வரும் வீரர்களுக்குதான் தற்போது வேலை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+