"ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டப்படி சரி, ஆனால்.." சிக்கல்களை எச்சரித்த மாஜி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்
டெல்லி: மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதிகள் நாடாளுமன்றக் குழுவுக்குத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். அதில் அவர்கள் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அரசியலமைப்பிற்கு உட்பட்டே இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் உட்படப் பல்வேறு அம்சங்கள் குறித்து கவலைகளை எழுப்பி ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.
மத்திய அரசு நமது நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைக் கொண்டு வர விரும்புகிறது. தற்போதுள்ள முறையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் தேதி மாறுபடுகிறது. அதாவது லோக்சபா தேர்தல், சட்டசபைத் தேர்தல்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கிறது.. ஆனால், அவை அனைத்தும் ஒரே நேரத்தில் நடப்பதில்லை. இதுபோல இருப்பதால் தொடர்ச்சியாகத் தேர்தல்கள் இருப்பதாகவும் இதனால் அதிகச் செலவாவதாகவும் மத்திய அரசு சொல்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல்
இதைக் கருத்தில் கொண்டே மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைக் கொண்டு வருகிறது. இது தொடர்பாக மாஜி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவிடம் பரிந்துரைகளும் பெறப்பட்டன. இருப்பினும், இந்த மசோதாவுக்கு நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாக எதிர்க்கட்சிகள் சாடின.
அரசியலமைப்பின்படி சரி
இதற்கிடையே இந்த விவகாரத்தில் நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதிகள் நாடாளுமன்றக் குழுவுக்கு தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். அதில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அரசியலமைப்பிற்கு உட்பட்டே இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் சமர்ப்பித்த கருத்தில், லோக்சபா மற்றும் மாநிலச் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாக எதிர்க்கட்சிகள் கூறுவதை நிராகரித்துள்ளார். ஏனெனில் தேசிய மற்றும் மாநில தேர்தல்களைத் தனித்தனியாக நடத்த வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் எங்கும் கூறவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள பரந்த அதிகாரங்கள் குறித்து சந்திரசூட் மற்றும் மற்றொரு முன்னாள் தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகோய் கேள்வி எழுப்பியுள்ளார். விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த வழிகாட்டுதல்களையும் விதிக்காமல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைய அதிகாரங்கள்
இந்த மசோதா தேர்தல் ஆணையத்துக்கு வழங்கும் பரந்த அதிகாரங்களைக் கேள்வி எழுப்பிய சந்திரசூட், இத்தகைய வரம்பற்ற அதிகாரம் அரசியலமைப்பின்படி நிர்ணயிக்கப்பட்ட ஐந்து வருட காலத்துக்கு அப்பால் ஒரு மாநிலச் சட்டசபையின் பதவிக்காலத்தைக் குறைக்கவோ அல்லது நீட்டிக்கவோ தேர்தல் ஆணையத்துக்கு உதவும் என்று கூறினார். அதேநேரம் தேர்தல் ஆணையம் இந்த அதிகாரத்தை எப்போது பயன்படுத்தலாம் என்பதற்குத் தெளிவான சூழ்நிலைகளை அரசியலமைப்பு வரையறுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் முன்னாள் தலைமை நீதிபதிகள் யு.யு. லலித் மற்றும் ரஞ்சன் கோகோய் ஆகியோர் குழுவின் முன்பு ஆஜராகி தங்கள் விளக்கங்களை அளித்தனர். அப்போது பலரும் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகப்படியான அதிகாரம் குறித்து கவலை எழுப்பியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
படிப்படியாக நடத்த வேண்டும்
தேர்தலை ஒரே நேரம் நடத்தப் பதவிக்காலம் உள்ள சட்டசபைகளைக் கலைப்பது சட்டப்படி கேள்விக்குள்ளாக்கப்படலாம் என்று மாஜி சுப்ரீம் கோர்ட் நீதிபதி லலித் கூறினார். மேலும் ஒரே நேரத்தில் இந்த மாற்றத்தைக் கொண்டு வராமல் படிப்படியாக அதை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார். அதேநேரம் மூன்று முன்னாள் தலைமை நீதிபதிகளும் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற கருத்தின் அரசியலமைப்புச் சட்டப்படியான தன்மையைக் கேள்விக்குள்ளாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் குறித்து கவலை தெரிவித்ததுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications