தீவிரமான வழக்கு இது..கலால் ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் மறுத்தது டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி: டெல்லியின் துணை முதலமைச்சராக மணீஷ் சிசோடியா பணியாற்றிய காலத்தில் கலால் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த மாற்றங்கள் மூலம் பெரும் ஊழல் நடந்துள்ளதாக சிபிஐ சிசோடியா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. இந்நிலையில், அவருக்கு தற்போது ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார். இந்த புகாரை டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் சில அரசு அதிகாரிகள் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த குற்றச்சாட்டில், மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து அரசின் தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆளுநர் கடந்த மாதம் கேட்டு கொண்டார். அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் சிசோடியா தொடர்புடைய 21 இடங்களில் சிபிஐ ரெய்டு மேற்கொண்டது. இந்த ரெய்டு குறித்து இன்று சிசோடியா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில், "மத்திய அரசுக்கு ஊழல் குறித்து கவலை இல்லை, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்துதான் கவலை" என்று கூறியுள்ளார். மேலும், ரெய்டு நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து மார்ச் மாதம், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கிலும் அவரை சிபிஐ கைது செய்தது. இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது சிசோடியா ஊழலில் ஈடுபட்டிருந்தபோது 14 செல்போன்கள் மற்றும் 43 சிம்கார்டுகளை பயன்படுத்தியிருந்ததாகவும், ஆனால் விசாரணை தொடங்கியபோது இவை அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் விசாரணை அமைப்புகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில் திகார் சிறையில் இருக்கும் சிசோடியாக ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சியங்ளை கலைத்துவிடுவார் என்று நீதிமன்றம் அச்சம் தெரிவித்துள்ளது. மட்டுமல்லாது இது தீவிரமான வழக்கு என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications