மன்மோகன் சிங்கிற்கு முழு ராணுவ மரியாதையுடன் நாளை காலை 11.45க்கு இறுதி சடங்கு.. மத்திய அரசு
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் நாளை (சனிக்கிழமை ) காலை 11.45 மணிக்கு டெல்லி நிகாம் போத் காட்டில் தகனம் செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. "முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு இறுதி ஊர்வலம் மற்றும் தகனத்தின் போது இராணுவ மரியாதைக்கான ஏற்பாடுகளை செய்ய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரத்தை வலுவாக மாற்றுவதற்கு முக்கிய பங்காற்றிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விஐபிக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் நாலை காலை 11:45 மணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.

80களில் ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும், 90களில் இந்தியாவின் நிதியமைச்சராகவும் இருந்தவர் டாக்டர் மன்மோகன் சிங். இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டைமைத்ததில் முக்கிய பங்குவகித்துள்ளார். 1991ல் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தாராளமாயத்திற்கு இந்திய சந்தைகயை திறந்துவிட்டார். இவரது புரட்சிகரமான முடிவால் தான் இந்தியாவில் இன்று ஏராளமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வந்துள்ளன. இந்தியாவின் பொருளதாரம் வலிமையாக இருப்பதற்கு மன்மோகன் சிங் முக்கிய காரணம் என்று போற்றப்படுகிறார். பாஜக உள்பட எல்லா கட்சிகளுமே மன்மோகன் சிங் இந்திய பொருளாதாரத்தை வலிமையாக்க பாடுபட்டார் என்பதை பதிவு செய்துள்ளன-

இந்நிலையில் மன்மோகன் சிங் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகி வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். ஏற்கனவே இருமுறை இருதய அறுவை சிகிச்சை செய்து இருந்த மன்மோகன் சிங், வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு வீட்டில் இருந்த அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
மயங்கிய நிலையில் இருந்த அவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங்கிற்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு 9.51 மணிக்கு மன்மோகன் சிங் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92 ஆகும்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணம் அடைந்த தகவல் அறிந்தது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல். துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி , எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் ஸ்டாலின், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பல்வேறு மாநில முதல்வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை அடுத்து ஏழு நாள் துக்கம் அணுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மன்மோகன் சிங் உடல் நாலை காலை 11. 45 மணிக்கு முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications