தேர்வு முறையில் சீர்திருத்தம்! IIT காமகோடி உட்பட 6 பேர் கொண்ட குழுவின் வேலை இதுதான்! மோடியின் பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வு முறைகேடுகள் மாணவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தேர்வு முறையில் சீர்திருத்தத்தை மேற்கொள்ள சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உட்பட 6 பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே கோமியம் குறித்து காமகோடி பேசியிருந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், இவர்களை கொண்டா.. குழு அமைக்கப்பட்டிருக்கிறது? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.

இந்த குழுவில் காமகோடி, இஸ்ரோவின் எஸ்.சோமநாத், நந்தன் நிலகேணி, தபன் குமார் டேகா, அனிதா கர்வால், அமரூத்லால் மீனா உள்ளிட்டோர் இடம் பெற்றிருக்கின்றனர். இவர்கள் யார் என்பது குறித்தும்.. இவர்களின் வேலை என்ன? என்பது குறித்தும் விரிவாக பார்ப்போம்.

Exam Reform Task Force

குழுவின் தலைவர்

இந்த குழுதான் தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து அரசுக்கு பரிந்துரைகளை கொடுக்கும். அந்த வகையில் இந்த குழுவின் தலைவராக இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், ஆதார் திட்டத்தின் முக்கிய வடிவமைப்பாளருமான நந்தன் நிலகேணி செயல்படுவார்.

இவர் UIDAI அமைப்பின் முதல் தலைவராக செயல்பட்டு உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள முறையை உருவாக்கினார். கோடிக்கணக்கான மக்களுக்கு டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை வெற்றிகரமாக கட்டமைத்த அனுபவம் கொண்டவர். தேர்வுகளை முறைகேடு இல்லாததாகவும், பாதுகாப்பான டிஜிட்டல் தொழில்நுட்ப கண்காணிப்புடன் மாற்றி அமைப்பதே இவரது முதல் வேலையாகும்.

இஸ்ரோ முன்னாள் தலைவர் சோமநாத்

இஸ்ரோவின் சந்திராயன்-3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகிய வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களின் தலைவராக செயலாற்றியவர்தான் சோமநாத். சிக்கலான பொறியியல் அமைப்புகள் மற்றும் ஜீரோ எரர் கொண்ட பாதுகாப்பு நடைமுறைகளை வடிவமைப்பதில் இவருக்கு பல ஆண்டு கால அனுபவம் இருக்கிறது. தேர்வு முறையில் எந்த ஒரு அச்சுறுத்தலும் ஊடுருவ முடியாத அளவுக்கு பாதுகாப்பை உறுதி செய்வது இவரது வேலை.

தபன் டேகா

1988ம் ஆண்டு பேட்ச் அசாம்-மேகாலயா ஐபிஎஸ் கேடரான இவர், உளவு துறையின் முன்னாள் இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் அச்சுறுத்தல் மற்றும் தீவிரமான சதி செயல்கள் குறித்து விசாரிப்பதில் சிறந்த அனுபவம் கொண்டவர். வினாத்தாள் கசிவை செய்யும் மாஃபியா கும்பல், உட்கட்டமைப்புக்குள் ஊடுருவல் செய்தல், மோசடி நெட்வொர்க்குகளை கண்டறிதல், அவற்றை வேரறுக்கும் பாதுகாப்பு பிளான்களை இவர் கச்சிதமாக போட்டு கொடுப்பார்.

ஐஐடி காமகோடி

சென்னை ஐஐடியின் இயக்குநரான டாக்டர் காமகோடி, மிகச்சிறந்த கணினி அறிவியல் அறிஞர் ஆவார். சக்தி மைக்ரோபிராசசர் போன்ற இந்திய செயலி மற்றும் உள்நாட்டு மென்பொருள் தொழில்நுட்ப மேம்பாடுகளில் முக்கிய பங்காற்றியவர். கணினி கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப கல்வித்துறையில் இவருக்கு இருக்கும் அனுபவம் மூலம், கணினி வழியிலான வினாத்தாள் பாதுகாப்பு மற்றும் தேர்வுமைய தொழில்நுட்ப தீர்வுகளை காண முடியும் என மத்திய அரசு நம்புகிறது.

இருப்பினும் இவர் கோமியம் குறித்து பேசியிருந்த கருத்துக்கள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், இவரை குழுவில் இணைத்தது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அனிதா கர்வால்

மத்திய கல்வி அமைச்சகத்தின் செயலாளராகவும், சிபிஎஸ்இ தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்தான் அனிதா கர்வால். இவர் குஜராத்தை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் கேடராவார்.

பள்ளி கல்வி சீர்திருத்தங்கள், கற்றல் முடிவுகள் மற்றும் தேசிய அளவிலான பொதுத்தேர்வுகளை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் கொண்டவர். புதிய சீர்திருத்தங்களை கல்வி நிறுவனங்களின் நடைமுறை சூழலுக்கு ஏற்ப செயல்படுத்துவதை இவர் உறுதி செய்வார்.

அம்ரித் லால் மீனா

மூத்த ஐஏஎஸ் அதிகாரியான இவர், லாஜிஸ்டிக் விஷயத்தில் எக்ஸ்பர்ட். நாடு தழுவிய அளவில் வினாத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்வது, இதற்கான செயின் நெட்வொர்க்கை உருவாக்குவது, ஏஜென்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றை இவர் பார்த்துக்கொள்வார்.

இப்படியாக தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளில் சீர்திருத்தங்களை இந்த குழு பரிந்துரைக்கும். அதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டால் எதிர்க்காலத்தில் வினாத்தாள் லீக் பிரச்சனை இருக்காது என்று மத்திய அரசு உறுதியாக கூறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+