லோக்சபா தேர்தல் நியாயமா நடக்குமா? சந்தேகம் கிளப்பிய ஐநாவுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் சுளீர் பதிலடி
டெல்லி: லோக்சபா தேர்தல் இன்னும் இரண்டு வாரத்தில் தொடங்க உள்ள நிலையில், இந்தியாவில் தேர்த்தல் நியாயமாக நடக்குமா? என ஐநா கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்திருக்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும், நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக ஏப்.19ம் தேதி தமிழகம் உட்பட 22 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம் ஆகியவை சலசலப்பை கிளப்பியுள்ளன. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் இந்த விவகாரம் விவாதமாக வெடித்தது.

அமெரிக்கா: அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், "அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட செய்திகளை அமெரிக்க அரசு கண்காணித்து வருகிறது. சிறையில் உள்ள டெல்லி முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்டச் செயல்முறையை உறுதி செய்ய, இந்திய அரசை ஊக்குவித்து வருகிறோம்" என்று கூறியிருந்தார்.
ஜெர்மனி: அதேபோல ஜெர்மனியும், "நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் அனைத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் மற்ற இந்தியக் குடிமக்களைப் போலவே கெஜ்ரிவாலும் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணைக்குத் தகுதியானவர்" என்று கூறியிருந்தது.
ஐநா: சர்வதேச நாடுகளின் கருத்துக்கள் இந்தியாவுக்கு தலைவலியை கிளப்பியுள்ள நிலையில், தற்போது ஐநாவும் கெஜ்ரிவால் விவகாரத்தில் இந்தியாவை சூசகமாக விமர்சித்துள்ளது. அதாவது, "இந்தியாவில் தேர்தல் நடைபெறும் சூழலில், மக்களின் 'அரசியல் மற்றும் சிவில் உரிமைகள்' பாதுகாக்கப்படும் எனவும், அனைவரும் சுதந்திரமாகவும் நியாயமாகவும் வாக்களிக்க முடியும் எனவும் நாங்கள் நம்புகிறோம்" என்று ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இவரது கருத்துக்கு தற்போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது, "தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவது குறித்து ஐ.நா. எங்களுக்கு சொல்ல தேவையில்லை. தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்தியாவின் மக்கள் உறுதி செய்வார்கள். எனவே, அது குறித்து கவலை கொள்ள வேண்டாம்" என்று காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications