"காரி துப்பினாலும் புத்தி வரலயே.. ஆஸ்கரா? பாஸ்கர் கூட கிடைக்காது.. பாஜக மீது பாய்ந்த பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ் பதான் படம் குறித்த ட்வீட் ஒன்றினை பதிவிட்டு பாஜகவை விமர்சனம் செய்துள்ளார்
டெல்லி: "காரி துப்பினாலும் கூட புத்தி வரவில்லை... ஆஸ்கர் அல்ல பாஸ்கர் விருது கூட கிடைக்காது" என்று பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
பிரபல நடிகர் ஷாருக் கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி உள்ளது பதான் படம்.. மிகப்பெரிய எதிர்பார்ப்பை பட ரிலீசுக்கு முன்பேயே ஏற்படுத்தி இருந்தது.
இந்த படத்தின் டிரைலர், பாடல்கள் கடந்த டிசம்பரில் வெளியானது.. அதில், பேஷாராம் ரங் என்ற பாட்டு, 2 விதமான சர்ச்சையை கிளப்பியது.

படுகவர்ச்சி
தீபிகா படுகோன் ரொம்ப கவர்ச்சியாக இருந்ததால் கலாச்சார சீர்கேடு என்ற விமர்சனங்கள் வெடித்தன.. மற்றொருபுறம், தீபிகா காவிநிற பிகினி அணிந்து உள்ளார் என்று பாஜகவினரும் இந்து அமைப்பினரும் கொந்தளித்ததுடன், கடும் கண்டனங்கள் எழுப்பி வந்தனர். இது இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் உள்ளது என்றும் இந்து அமைப்புகள் சீறின.. மேலும், இந்த பாடலுக்கு தடை கோரி, கோர்ட்டில் கேஸும் தொடுக்கப்பட்டது.. பிரதமமர் மோடி சமீபத்திய உரையில், "நம்மில் சிலர் சினிமாக்களை பற்றி தேவையற்ற கருத்துகளை வெளியிடுகிறார்கள்.

ஐநாக்ஸ்
தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்" என்றும் கூறியிருந்தது கவனத்தை பெற்றது. பல மாநிலங்களில் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராட்டம் நடத்தினர்.. மத்திய பிரதேசத்தில் ஐநாக்ஸ் தியேட்டரில் இந்து ஜாக்ரண் மஞ்ச் அமைப்பின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. அதேபோல அசாம் மாநிலத்திலும் இந்த பிரச்சனை தலைதூக்கி, அம்மாநில முதல்வர் வரை தலையிடும் அளவுக்கு பஞ்சாயத்து சென்றது.. எனினும், பல்வேறு தரப்பில் பதான் படத்துக்கு ஆதரவுகள் பெருகின.. ஏராளமான பிரபலங்கள் முன்வந்து, தங்கள் வாழ்த்தையும் சொல்லினர்.. அதில் முக்கியமானவர் பிரகாஷ் ராஜ்..

அருவெறுப்பு
பதான் பாடலுக்கு இப்படி எதிர்ப்புகள் வலுத்து வந்த நிலையில், அதை ஆதரித்து அப்போதே கருத்து தெரிவித்திருந்தார் பிரகாஷ்ராஜ்.. இந்து அமைப்பிலும், பாஜக அமைச்சர்களும், பதான் பாடலுக்கு வார்னிங் தந்தபோதே பிரகாஷ்ராஜ் தன் கருத்தை கூறியிருந்தார்.. "அருவெறுப்பாக இருக்கு... எவ்வளவு நாள் இந்த மாதிரியான வண்ணக் குருடை பொறுத்துக்கொள்ள வேண்டும்?" என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார்... மேலும், தீபிகா படுகோனே கால்பந்து உலகக் கோப்பையுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்ட பிரகாஷ்ராஜ், அவரை பாராட்டவும் செய்தார்.

வண்ணக்குருடு
தீபிகா படுகோனேவை நினைத்து பெருமைப்படுகிறேன். பேஷ்ரம் ரங் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மத வெறியர்கள் இப்போது உலக கோப்பையை புறக்கணிப்பார்களா? என்று கேட்க தோன்றுகிறது என பதிவிட்டிருந்தார். இப்போது பதான் படம் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.. 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறது... இந்நிலையில் பதான் திரைப்படம் திரைக்கு வந்து 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை புரிந்திருக்கிறது... இப்போதும் ஒரு கருத்தை சொல்லி உள்ளார் பிரகாஷ்ராஜ்..

புத்தி வரலயே
இந்த படத்தை எதிர்த்தவர்களால் பிரதமர் நரேந்திர மோடி படத்திற்கு 30 கோடி ரூபாய் கூட வசூல் செய்ய முடியவில்லை... காஷ்மீர் பைல்ஸ் என்கிற பிரச்சார படத்தை எடுத்தார்கள். . அந்த படத்தை பார்த்துட்டு சர்வதேச கலைஞர்கள் துப்பினார்கள்... அப்படியும் கூட இவர்களுக்கு எல்லாம் புத்தியே வரவில்லை. .. காஷ்மீர் பைல்ஸ் படத்தை இயக்கிய டைரக்டர் வேறு இந்த படத்துக்கு ஏன் ஆஸ்கர் கொடுக்கவில்லை? என்று சொன்னார்.. . ஆஸ்கர் இல்லை பாஸ்கர் விருது கூட கிடைக்காது என்று பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார்.. பிரகாஷ்ராஜின் இந்த கிண்டல், பாஜக தரப்பை மேலும் கடுப்பாக்கி வருகிறது.

குரைப்பவர்கள்
முன்னதாக, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மாத்ருபூமி சர்வதேச கடித திருவிழாவில் கலந்துக் கொண்ட பிரகாஷ் ராஜ், பதான் படம் குறித்து பேசியிருந்தார்.. "பதான் திரைப்படத்தை தடை செய்யவும் புறக்கணிக்கவும் அழைப்பு விடுத்தவர்கள் சும்மா "குரைப்பவர்கள்", "கடிக்கமாட்டார்கள்.. அவர்கள் பதான் திரைப்படத்தை தடை செய்ய விரும்பினர். ஆனால் படம் 700 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது. இந்த முட்டாள்கள், மதவெறியர்கள்... பதானை தடை செய்ய நினைத்தவர்கள், மோடியின் (பி.எம் நரேந்திர மோடி) படத்தை 30 கோடி ரூபாய் வசூலிக்கும் அளவுக்கு கூட பார்க்கவில்லை. எல்லோருக்கும் தெரிந்ததுபோல்... அவர்கள் குரைக்கிறவர்கள், கடிக்கமாட்டார்கள் " என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications