Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தம்பிதுரையை" பார்த்ததுமே.. டக்குனு கட்டிப்பிடித்த டி.ஆர்.பாலு.. திகைத்த புள்ளி.. ஒரே பெஞ்சில் 6 பேர்?

தம்பிதுரையும், டிஆர் பாலுவும் ஒருவரையொருவர் புன்னகைத்து கட்டி தழுவிக்கொண்டனர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுகவின் தம்பிதுரை, திமுகவின் டிஆர் பாலு, இரு மூத்த தலைவர்களும், ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்ததுடன், கட்டி தழுவியும் கொண்டனர்.. இதுகுறித்த செய்திகள்தான் பலரையும் ஈர்த்து வருகிறது.

ராகுல்காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் என கடந்த ஞாயிறு, திங்கட்கிழமைகளில் ஸ்ரீநகரில் முகாமிட்டிருந்தனர்.

இந்நிலையில்தான், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அப்போது நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.

 மோசமான கிளைமேட்

மோசமான கிளைமேட்

அப்போது முக்கிய விஷயங்களை குறிப்பிடும்போது பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாஜக எம்.பி.க்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்... ஆனால், பெரும்பாலான காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவையில் காணப்படவில்லை.. ஸ்ரீநகரில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, விமானங்கள் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. அதனால், மல்லிகார்ஜூன கார்கே, அதீர் ரஞ்சன், சௌதாரி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.. ஆனால், பாராளுமன்ற மையமண்டபத்தில் நடைபெற்றபோது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தனியாக வந்து அமர்ந்திருந்தார்...

 மு தம்பிதுரை

மு தம்பிதுரை

வழக்கமாக அவர் தன்னுடைய கட்சி எம்பிக்கள் புடைசூழ அமர்ந்திருக்கும் சோனியா, நேற்றைய தினம் தனியாகவே முன்வரிசை பெஞ்சில் உட்கார்ந்திருந்தார்.. எனினும், சோனியாவிடம் பலரும் வந்து வணக்கம் செலுத்திவிட்டு, நலம் விசாரித்துக்கொண்டனர்... சோனியா காந்தியும், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரும் பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்... சோனியாவுக்கு அருகில் அமர்ந்திருந்த மத்திய சிவில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா அவரிடம் பேசிக்கொண்டதை காண முடிந்தது...

 டி ஆர் பாலு

டி ஆர் பாலு

அதேபோல, பின்வரிசையில் அமர்ந்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையனிடம், சோனியா நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.. மேலும், பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில்தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே, திமுக எம்பி கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுக்கதா ராய், பாஜக எம்பி நீரஜ் சேகர், சிவகுமார் உடாசி, நிஷிகந்த் துபே ஆகிய 6 பேரும் ஒன்றாக அமர்ந்திருந்ததை காண முடிந்தது. வழக்கமாக ஒரு பெஞ்சில் 5 எம்பிக்கள் வரையே அமரும் நிலையில், வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த 6 பேரும் ஒரே இருக்கையை பகிர்ந்து கொண்டனர்..

தம்பிதுரை

தம்பிதுரை

அதேபோல, கட்சி வித்தியாசம் பாராமல் அதிமுக மாநிலங்களவை எம்பி தம்பிதுரை, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் ஆகியோர், பிரதமர் மோடியுடனான கலந்துரையாடலின்போது, ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்ததுடன், இறுக்கமாக தழுவியும் கொண்டனர்.. பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, மக்களவை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வானிடம் பேசிய பிரதமர் மோடி, அவரது தாயார் உடல்நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்ததையும் பார்க்க முடிந்தது. மொத்தத்தில், தேசிய அரசியல் களம் ஒருபக்கம் கொதித்து கொண்டிருந்தாலும், மற்றொருபக்கம் பலகட்சி தலைவர்களின் நாகரீக அரசியல் குளிர்ந்தே காணப்படுவது, பெருமிதத்தையே நம்மிடம் உண்டுபண்ணி வருகிறது..!!

தம்பிதுரை

தம்பிதுரை

அதேபோல, கட்சி வித்தியாசம் பாராமல் மற்றொரு நிகழ்வும் நேற்றைய தினமே நடந்துள்ளது.. அதிமுக மாநிலங்களவை எம்பி தம்பிதுரை, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் ஆகியோர், பிரதமர் மோடியுடனான கலந்துரையாலின்போது, ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்ததுடன், இறுக்கமாக தழுவியும் கொண்டனர்.. பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, மக்களவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வானிடம் பேசிய பிரதமர் மோடி, அவரது தாயார் உடல்நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்ததையும் பார்க்க முடிந்தது. மொத்தத்தில், எம்பி தேர்தலையொட்டி, தேசிய அரசியல் களம் ஒருபக்கம் கொதித்து கொண்டிருந்தாலும், மற்றொருபக்கம் தலைவர்களின் நாகரீக அரசியல் குளிர்ந்தே காணப்படுவது, பெருமிதத்தையே நம்மிடம் உண்டுபண்ணி வருகிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+