முதல் நாளே சோதனை- புதிய நாடாளுமன்றம் நோக்கி மல்யுத்த வீராங்கனைகள் பேரணி- இணையும் விவசாயிகள்!
டெல்லி: நாட்டின் புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்ட முதல்நாளே தேசத்துக்கு பெருமை சேர்க்கும் மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு நீதி கோரி புதிய நாடாளுமன்றம் நோக்கி முற்றுகைப் பேரணி நடத்த உள்ளனர். இதனால் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார். 1947-ம் ஆண்டு தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோலை புதிய லோக்சபாவில் பிரதமர் மோடி நிறுவினார். தமிழ்நாட்டு ஆதீனங்களின் ஆசி பெற்று இந்த செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார். இந்நிகழ்வில் சர்வமத பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இந்நிலையில் டெல்லியில் தங்களுக்கு நீதி கோரி போராடும் மல்யுத்த வீராங்கனைகள், புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதாக அறிவித்துள்ளனர். மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷணின் பாலியல் அத்துமீறல்களுக்கு நடவடிக்கை கோரியே இந்த போராட்டத்தை மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் நடத்தி வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது. இன்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு ஜந்தர் மந்தர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர போலீசார் முயற்சித்தனர்.
இதனிடையே புதிய நாடாளுமன்றத்தை நோக்கி மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்தில் விவசாயிகளும் இணைய உள்ளனர். மேலும் விவசாயிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கூடும் மகா பஞ்சாயத்தையும் கூட்ட இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதாக அறிவித்த மல்யுத்த வீராங்கனைகள் சிலர் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் ஒன்று கூடாத வகையில் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி எல்லைகளில் உள்ள குருத்வாராக்களும் போலீஸ் முற்றுகையில் உள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் வழியாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்குள் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடத்தில் பங்கேற்க இருக்கின்றனர். இதனால் அனைத்து டெல்லி எல்லைகளும் முழு உஷார் நிலையில் உள்ளன.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications