டெல்லியில் மீண்டும் மையம் கொள்ளும் விவசாயிகள் போராட்டம்- நொய்டாவில் இருந்து 'டெல்லி சலோ' பேரணி!
டெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இன்று முதல் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை நடத்த உள்ளனர். இதற்காக நொய்டா எல்லையில் இருந்து டெல்லி நோக்கி பாதயாத்திரையாக செல்கின்றனர் விவசாயிகள். டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியிலேயே முகாமிட்டு விவசாயிகள் இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
மத்திய பாஜக அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஓராண்டு டெல்லி எல்லைகளில் முகாமிட்டு விவசாயிகள் உக்கிரப் போராட்டம் நடத்தினர். பஞ்சாப், ஹரியானா, உ.பி. உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் பங்கேற்ற 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர்.

உலகின் கவனம் ஈர்த்தது இந்த விவசாயிகள் போராட்டம். இதனையடுத்து மத்திய பாஜக அரசு தமது 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. பிரதமர் மோடியும் இந்த சட்டங்களைக் கொண்டு வந்ததால் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் போது விவசாய சங்கத்தினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையில் வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வருதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு அளித்தது.
ஆனால் மத்திய பாஜக அரசு தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறி கடந்த பிப்ரவரி மாதம் முதல் பஞ்சாப்- ஹரியானா எல்லையான சம்புவில் முகாமிட்டு விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் அடுத்த கட்டமாக நொய்டாவில் இருந்து டெல்லி நோக்கி இன்று விவசாயிகள் அணிவகுத்து செல்ல இருக்கின்றனர். டெல்லியில் முகாமிட்டு தங்களுக்கு மத்திய பாஜக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி போராட்டம் நடத்தவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் டெல்லி மீண்டும் பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது. மேலும் நொய்டாவில் விவசாயிகள் அணிவகுப்பைத் தடுக்கும் வகையில் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர். அப்பகுதியில் போக்குவரத்திலும் மாற்றங்களை அறிவித்துள்ளது போலீஸ். இதனால் நொய்டா- டெல்லி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications