பாஸ்டேக் வருடாந்திர பாஸ்.. 200 டிரிப்களை முடிந்துவிட்டால் என்னவாகும்! இது தெரியாம வாங்கவே வேண்டாம்
டெல்லி: மத்திய அரசின் பாஸ்டேக் வருடாந்திர பாஸ் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் நாம் நெடுஞ்சாலைகளில் 200 முறை டோல்கேட்களை கடந்து செல்லலாம். அதேநேரம் 200 டிரிப்களை தாண்டிவிட்டால் என்னவாகும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதற்கான பதிலையும் பாஸ்டேக் ஆண்டு பாஸை எப்படி எடுக்க வேண்டும் என்பது குறித்தும் நாம் பார்க்கலாம்.
மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டில் சாலை உட்கட்டமைப்பை வலுப்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ் சாலைகள் அமைக்கப்பட்டன. இந்த நெடுஞ்சாலைகள் போக்குவரத்து நேரத்தைக் குறைப்பதால் மக்களுக்குப் பெரியளவில் உதவுகிறது. சரக்குகள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்லும் செலவுகளையும் கணிசமாகக் குறைப்பதாக இருந்தது.

நெடுஞ்சாலைகளில் புதிய பயணம்
அதேநேரம் நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் பெரிய பிரச்சனையாக இருப்பதாகப் பொதுமக்கள் பலரும் புகாரளித்தனர். ஒவ்வொரு முறையும் பெரிய தொகையைச் சுங்க கட்டணமாகவே செலுத்த வேண்டி இருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டினர். சுங்க கட்டணத்தைக் குறைக்கவில்லை என்றால் நெடுஞ்சாலைகளில் செல்வதே அர்த்தமற்று போய்விடும் என்றெல்லாம் பலரும் குறிப்பிட்டனர்.
மேலும், வருடாந்திர பாஸ் போன்ற அமைப்பைக் கொண்டு வரவும் பலரும் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று மத்திய அரசு வருடாந்திர பாஸை கொண்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், இன்று ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது.
பாஸ்டேக் வருடாந்திர பாஸ்
இந்த பாஸ்டேக் வருடாந்திர பாஸ் அடிக்கடி நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்குப் பயண அனுபவம் எளிதாகிறது. NHAI எனப்படும் இந்தியத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பாஸ்டேக் ஆண்டு பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. டாக்ஸி அல்லது கமர்ஷியல் வாகனங்களைத் தவிர்த்து தனிநபர் வாகனங்களான ஒயிட் போர்ட் வாகனங்களுக்கு இதை நாம் பயன்படுத்தலாம்.
இது ஒரு ப்ரீபெய்ட் திட்டமாகும். இதன் கீழ் நாம் ஒரு முறை ரூ.3000 செலுத்திவிட்டால் 200 முறை டோல் கேட்களை கடந்து செல்லலாம். அல்லது ஓராண்டிற்கு இது செல்லுபடியாகும். அதாவது ஓராண்டிற்குள் 200 பயணங்கள் முடிந்துவிட்டால் இது காலாவதியாகிவிடும். 200 பயணங்களை முடிக்கவில்லை என்றாலும் 365 நாட்களில் இது தானாக முடிந்துவிடும்.
எப்படி வாங்குவது
இந்த பாஸ்டேக் வருடாந்திர பாஸை ராஜ்மார்க் யாத்ரா செயலி அல்லது NHAI/MoRTH இணையதளம் மூலம் ஆன்லைனில் வாங்கலாம். தற்போது ஃபாஸ்டேக் பயன்படுத்துவோர், புதிய பாஸ் வாங்காமலேயே தங்கள் தற்போதைய பாஸ்டேக்கை ஆண்டு பாஸாக மாற்றிக் கொள்ள முடியும். இதுவும் கூட ரொம்பவே ஈஸியான பிராசஸ் தான்.
பாஸ்டேக் ஆண்டு பாஸ் வாங்கினாலும் வழக்கம் போலவே நாம் சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லலாம். அதில் எந்தவொரு மாற்றமும் இருக்காது. இந்த வருடாந்திர பாஸை பாஸை வாங்க, ராஜ்மார்க் யாத்ரா செயலி அல்லது NHAI/MoRTH இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதில் உங்கள் வாகனப் பதிவு எண், ஃபாஸ்டேக் ஐடி, மற்றும் செயலில் உள்ள இணைக்கப்பட்ட ஃபாஸ்டேக் கணக்கு ஆகியவை பதிவிடுங்கள். அடுத்த ஸ்டெப்பில் ₹3,000 செலுத்தியவுடன் வருடாந்திர பாஸ் ஆக்டிவேட் ஆகிவிடும்.
பலன் இருக்கு!
நெடுஞ்சாலைகளில் அடிக்கடிப் பயணம் செய்வோருக்கு இந்தப் பாஸ் பலன் அளிக்கும். இது மட்டுமின்றி ஒரு டிரிப் போய் வந்தாலே ரூ.700- 900 வரை சுங்கக் கட்டணமாகச் செலுத்த வேண்டி இருக்கிறது. எனவே, ஆண்டுக்கு ஒரு சில முறை நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கும் கூட இது ஓரளவுக்குப் பலன் தருவதாக இருக்கும்.
200 டிரிப் முடிந்தால் என்னவாகும்?
200 முறை டோல்களை கடந்த பிறகு என்னவாகும் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.. 200 டிரிப் முடிந்துவிட்டால் வருடாந்திர பாஸில் இருந்து தானாகவே வழக்கமான ஃபாஸ்டேக் கணக்கிற்கு மாறிவிடும்.. இது தானாகப் புதுப்பிக்கப்படாது. காலாவதியான பிறகு வருடாந்திர பாஸை தொடர விரும்பினால், மீண்டும் ₹3,000 செலுத்த வேண்டும்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications