ரூ.3,000 பாஸ்டேக் பாஸ்! யாருக்கு கிடைக்காது? "இவர்கள்" வாங்கினாலும் வேஸ்ட் தான்! இது முக்கியம் ஆச்சே
டெல்லி: நமது நாட்டில் சுங்க கட்டணம் அதிகமாக இருப்பதாகப் பொதுமக்கள் பலரும் கூறி வந்த நிலையில், அந்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் மத்திய அரசு கடந்த வாரம் ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், இந்த பாஸ் யாருக்குப் பொருந்தும்.. எப்படி வாங்கலாம் என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்குச் சுங்க கட்டணம் தான் பெரிய பிரச்சினையாக இருக்கும். ஒவ்வொரு முறையும் பயணிக்கும் போதும் கணிசமான தொகையைச் சுங்க கட்டணமாகவே செலுத்த வேண்டி இருக்கும். இருப்பினும், மக்கள் பலரும் சுங்க கட்டணம் அதிகமாக இருப்பதாகப் புலம்பினர். சுங்க கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.

பாஸ்டேக் வருடாந்தர பாஸ்
அல்லது பாஸ் போன்ற முறையைக் கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று மத்திய அரசு இப்போது வருடாந்திர சுங்க கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் தான் நெடுஞ்சாலைகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில், பாஸ்டேக் வருடாந்திர பாஸ் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்தது. இந்த வருடாந்திர பாஸின் விலை ரூ.3,000 ஆகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் இந்த பாஸ் கிடைக்கும்.
யாருக்குக் கிடைக்கும்? யாருக்குக் கிடைக்காது?
இது கார், ஜீப் மற்றும் வேன் வாகனங்களில் சொந்த பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்த பாஸ் ஆக்டிவேட் செய்யப்பட்ட தேதியிலிருந்து ஒரு ஆண்டு வரை பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது 200 முறை சுங்கச்சாவடிகளை இலவசமாகக் கடந்து செல்லலாம்.
அதேநேரம் வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களில் இதைப் பயன்படுத்த முடியாது. லாரி, டிரக், டாக்சி உள்ளிட்ட வாகனங்களுக்கு இந்த வருடாந்திர பாஸ் கிடைக்காது. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒயிட் போர்ட் வாகனங்களுக்கு மட்டுமே வருடாந்திர பாஸ் கிடைக்கும்.. மஞ்சள் போர்ட் வாகனங்களுக்கு பாஸ் கிடைக்காது.
யாருக்குப் பயனுள்ளதாக இருக்கும்?
- அடிக்கடி நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களுக்கு இது மிகப் பெரியளவில் பயனுள்ளதாக இருக்கும்.
- இது சுங்கச் சாவடிகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும். அதேநேரம் நீண்ட தூர நெடுஞ்சாலை பயணங்களிலும் பலன் கொடுக்கும்.
யாருக்கு பயன் தராது?
அதாவது நீங்கள் ஆண்டுக்கே ஓரிரு முறை தான் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு இந்த பாஸ் பயனுள்ளதாக இருக்காது. அதேநேரம் மாதம் ஒரு முறையாவது செல்வேன் என்போருக்கு இது பயனுள்ளதாக இருக்கும். லிங்க்ட் இன் யூசர் ஒருவர் இந்த பாஸ் மூலம் ஆண்டுக்கு ரூ.5,000- 7000 வரை சேமிக்க முடியும் என்று சொல்லி கணக்கைப் பகிர்ந்திருந்தார். எவ்வளவு தொகை என்பது ஒவ்வொருவரின் பயன்பாட்டைப் பொறுத்து மாறும்.
வாங்குவது எப்படி?
பாஸ்டேக் வருடாந்திர பாஸ் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் கிடைக்கும். இதை நாம் ராஜ்மார்க் யாத்ரா மொபைல் செயலி மூலம் வாங்கலாம். அல்லது இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் இணையதளத்திலும் இதை நாம் பெறலாம். மோசடிகளைத் தவிர்க்க இதர போர்ட்டல்கள் மூலம் வருடாந்திர பாஸ் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
கவனிக்க வேண்டியது
- தனிப்பட்ட வாகனம், அதாவது ஒயிட் போர்ட்டாக வேண்டும்
- வாகனத்தின் விண்ட்ஷீல்டில் ஏற்கனவே ஆக்டிவ்ஃபாஸ்டேக் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்
- வாகனத்தின் பாஸ்டேக் சரியான வாகனப் பதிவு எண்ணுடன் (VRN) இணைக்கப்பட்டிருக்க வேண்டும்
- குறிப்பிட்ட பாஸ்டேக் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கக் கூடாது
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!












Click it and Unblock the Notifications