வாகனங்களுக்கு இன்று முதல் பாஸ்டேக் கட்டாயம் - இல்லாவிட்டால் சுங்கச்சாவடிகளில் 2 மடங்குக்கட்டணம்

பாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இன்று முதல் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை அமலுக்கு வருகிறது. பாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்த நீண்ட நேரம் காத்திருப்பது, எரிபொருள் வீணாவது, சில்லறை வழங்குவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை களையும் விதமாக பாஸ்டேக் முறையை மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் முதல் கட்டாயமாக்கியது.

FASTag Must From Today : No fastag Pay twice the toll charge

இதனை செயல்படுத்துவதில் சிக்கல் எழுந்ததால் மூன்று முறை அவகாசம் வழங்கிய மத்திய அரசு, இன்று பிப்ரவரி 16ம் தேதி முதல் பாஸ்டேக் முறை அமல்படுத்தபடும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது.

இதன்படி, சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் வாகனங்களில் பாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுங்கச்சாவடிகளில் உள்ள அனைத்து லேன்களும் இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் லேன்களாக மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பாஸ்டேக் பெற்று செல்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+