கண் மூடி திறப்பதற்குள் கடந்து சென்ற ரயில்! ஜெட் வேகம்.. மிரள வைத்த ஜப்பான்.. ஸ்பீடை கேட்டா தலைசுற்றிடும்

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: ஜப்பானில் அடுத்த தலைமுறை ரயில் என்று கருதப்படும் மக்லேவ் ரயிலுக்கான சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ரயிலின் வேகத்தை பார்த்த ஜப்பான் மக்கள் மெய்சிலிர்த்து போயுள்ளனர். ஏற்கனவே புல்லட் ரயில்கள் ஜப்பானிலும் ஓடி வரும் நிலையில் இந்த சோதனை ஓட்டத்தில் இயக்கப்பட்ட ரயிலின் வேகம் ஜப்பான் மக்களையே தலைசுற்ற வைக்கும் அளவுக்கு இருந்துள்ளது. இந்த ரயில் சென்ற வேகம் குறித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஜப்பான் அதிநவீன போக்குவரத்து வசதிகளை கொண்ட நாடுகளில் முதன்மையானதாக உள்ளது. குறிப்பாக ஜப்பானில் ரயில் போக்குவரத்து உலக அளவில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அதிவேகம், துல்லியமான நேரம் ஆகியவற்றை கொண்டது என பலராலும் பாராட்டப்படுகிறது.

faster-than-the-eye-can-follow-500-kmph-train-leaves-spectators-amazed-in-japan

500 கிமீ வேகம்

ஏற்கனவே, மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய புல்லட் ரயில்கள் ஜப்பானில் இயங்கி வரும் நிலையில், தற்போது ஜெட் வேகம் என சொல்லும் அளவிற்கு மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அடுத்த தலைமுறை ரயிலை தற்போது சோதனை செய்து வருகிறது. இந்த ரயில்கள் மக்லேவ் ரயில் என்று அழைக்கப்படுகிறது.

அதாவது magnetic levitation காந்த சக்தி மிதப்புடன் இயங்கும் தொழில் நுட்பத்தில் இது வடிவமைக்கப்பட்டது. இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் ஜப்பானில் நடைபெற்றது. அதிவேக ரயில் என்பதால் சோதனை ஓட்டத்தை காண செய்தியாளர்கள், பொதுமக்கள் என பலரும் குவிந்தனர். இந்த ரயில் வேகமாக செல்லும் என்று தெரியும். ஆனால் அங்கு நின்றவர்களையே மிரள வைக்கும் வகையில், ரயிலின் வேகம் அமைந்து இருந்தது.

கண் இமைக்கும் நேரத்தில்

அதாவது கண் இமைக்கும் நேரத்தில் ரயில் கடந்து சென்றுவிட்டது. "வா.. ம்மா மின்னல்" என்று சொல்வதற்குள் விருட்டெனெ போவது போல ரயிலானது ஜெட் வேகத்தில் சென்றதை பார்த்து அங்கு கூடியிருந்தவர்கள் மெய்சிலிர்த்து போகினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மணிக்கு 300 மைல் வேகம் கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த ரயில் சென்றாலும் தட தட என்ற சத்தமும் இன்றி விருட்டென செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

நேரில் பார்த்தவர் சொன்னது

இந்த காட்சிகளை நேரில் பார்த்த ஒரு செய்தியாளர் கூறுகையில், "ஜெட் வேகத்தில் இந்த ரயில் சீறி சென்றது. அதிவேகமாக இந்த ரயில் சென்றதால், அதை காண முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்" என்று கூறி ஆச்சர்யம் போகாமல் சிரித்தார். இந்த ரயிலை, ஜப்பானின் மத்திய ரயில்வே நிறுவனமும், ரயில்வே டெக்னிக்கல் ஆய்வு நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

சென்னை டூ குமரிக்கு ஒன்றரை மணி நேரம் தான்

ஜப்பானின் இந்த புதிய ஜெட் வேக ரயிலின் வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து நெட்டிசன்கள் கூறியிருப்பதாவது:- கண்ணை மூடி முழித்தால் போதும் இந்த ரயிலை விட்டு விடுவீர்கள். அந்த அளவுக்கு வேகமாக செல்கிறது" என்று பதிவிட்டுள்ளனர்.

சில நெட்டிசன்களோ தங்களுக்கே உரிய நகைச்சுவை பாணியில் கமெண்ட் செய்துள்ளனர். சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு 1.5 மணி நேரத்தில் இந்த ரயிலில் சென்றுவிடலாம். இந்தியாவுக்கு எப்போதான் வரும் என்று இங்குள்ள நெட்டிசன்களும் வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+