இந்த குட்டியை கெஜ்ரிவாலை போல் நேர்மையாக, கடின உழைப்பாளியாக வளர்ப்போம்.. லிட்டில் மப்ளர்மேனின் தந்தை
Recommended Video
டெல்லி: ஆவ்யானை கெஜ்ரிவாலை போல் நேர்மையானவராக வளர்க்க நாங்கள் பாடுபடுவோம் என டெல்லி முதல்வர் பதவியேற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட குட்டி விஐபியின் தந்தை தெரிவித்தார்.
டெல்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் டெல்லியில் 3ஆவது முறையாக ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியது.

இதற்கான பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஒரு வயது குழந்தை அழைக்கப்பட்டது. ஆம் போலி மீசை, கண்ணாடி, மப்ளர் ஆகியவற்றை அணிந்து கொண்டு கெஜ்ரிவால் போல் காட்சியளித்த சிறுவன்தான் இன்று விழாவில் கலந்து கொண்டான்.
அவனது பெயர் ஆவ்யான் தோமர். இவரது தந்தை தொழிலதிபர் ராகுல் தோமர், தாய் மிகாஷி. இருவரும் ஆம் ஆத்மி ஆதரவாளர்கள். அரசியல்வாதிகள், மற்ற மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் இந்த குட்டி விஐபி மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றான்.
Father of the 'Little Mufflerman':It was his mother's idea to dress him up like Arvind Kejriwal. At this age,he can just copy his attire but as he grows, we'll try that he becomes an honest & a hard-working person like Arvind Kejriwal. We all like Kejriwal sir&his policies.#Delhi https://t.co/wlkXHLWKsW pic.twitter.com/DFWuLpObNe
— ANI (@ANI) February 16, 2020
இதுகுறித்து ஆவ்யானின் தந்தை ராகுல் செய்தியாளர்களிடம் கூறுகையில் கெஜ்ரிவாலை போல் ஆடை அணிவது என்பது ஆவ்யானின் தாய் கொடுத்த ஐடியா. இந்த வயதில் அவரது ஆடை, அலங்காரத்தை மட்டுமே என் மகனால் காப்பி செய்ய முடியும்.
ஆனால் அவன் வளர்ந்தவுடன் கெஜ்ரிவாலை போல் கடின உழைப்பாளியாகவும் நேர்மையாகவும் வளர நாங்கள் பாடுபடுவோம். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் கெஜ்ரிவாலையும் அவரது கொள்கைகளையும் விரும்புகிறோம் என்றார் ராகுல்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications