இந்தியாவுக்கு நல்ல பெயர்.. ஆனால் மோடிக்கு? ஜி20 உள்ளிட்ட 24 நாடுகளில் நடந்த சர்வே சொல்வது என்ன?
டெல்லி: இந்தியாவில் செப்டம்பர் மாதம் ஜி 20 மாநாடு நடைபெற உள்ள நிலையில், அந்த குழுவில் உள்ள நாடுகள் உட்பட 24 நாடுகளில் இந்தியா குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி பற்றியுடம் நடத்தப்பட்ட சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பியூ ஆராய்ச்சி மையம் ஜி20 மாநாட்டை முன்னிட்டு ஒரு சர்வே நடத்தி இருக்கிறது. கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை ஜி20 கூட்டமைப்பில் இடம்பெற்று இருக்கும் நாடுகள் உட்பட 24 நாடுகளை சேர்ந்த 30 ஆயிரம் மக்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டு இருக்கிறது.

இதில் 46 சதவீதம் பேர் இந்தியாவை சாதகமாக கருதுகிறார்கள். 34 சதவீதம் பேர் இந்தியாவுக்கு எதிராக வாக்களித்து உள்ளார்கள். இந்த கூட்டமைப்பில் உள்ள 12 நாடுகளை சேர்ந்த மக்களிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் குறித்த பார்வை என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.
சர்வதேச விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் குறித்து 40 சதவீதம் மக்கள் அவநம்பிக்கையை தெரிவித்து இருக்கிறார்கள். அதே சமயம் 30 சதவீதம் மக்கள் நரேந்திர மோடியால் முடியும் என கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
பியூ சர்வேயில் அமெரிக்காவை மட்டும் எடுத்துக்கொண்டால் இந்தியாவுக்கு சாதகமாக 51 சதவீதம் பேர் வாக்களித்து இருக்கிறார்கள். 44% சதவீதம் எதிராக கருத்திட்டு உள்ளார்கள். பிரதமர் மோடியின் சர்வதேச செயல்பாடுகளில் 21 சதவீதம் அமெரிக்கர்கள் மட்டுமே தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக கூறி இருக்கிறார்கள். 37 சதவீதம் பேர் மோடி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்த சர்வே முடிவுகளை பார்த்தால் சர்வதேச அளவில் இந்தியாவின் மீதான எதிர்மறை கருத்துக்களைவிட நேர்மறையான கருத்துக்களே அதிகம் உள்ளன. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் இந்தியா மீதான மதிப்பு குறைந்து இருக்கிறது. பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, போலந்து ஆகிய நாடுகளில் 2008ல் எடுக்கப்பட்ட சர்வேயுடன் ஒப்பிடுகையில் தற்போது 10% ஆதரவு சரிந்து உள்ளது.
இதில் பிரான்ஸ் நாட்டில்தான் இந்தியாவுக்கு இருந்த ஆதரவு கடுமையாக சரிந்து இருப்பதை பார்க்க முடிகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அந்நாட்டில் 70 சதவீதம் பேர் இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால், தற்போது 39% பேர் மட்டுமே இந்தியாவை ஆதரித்து உள்ளார்கள். 2 வாரங்களில் இந்திய தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில் இந்த சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஜி20 கூட்டமைப்பில் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா, சவூதி அரேபியா, துருக்கி, இந்தோனேஷியா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மெக்சிகோ, கனடா, பிரேசில், தென் கொரியா, துருக்கி, ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா உள்ள நாடுகள் உள்ளன. சர்வதேச ஜிடிபியில் 85 சதவீதத்தை இந்த நாடுகள் கொண்டுள்ளன. 75 சதவீத சர்வதேச வர்த்தகம், உலக மக்கள் தொகையில் 3ல் 2 மடங்கு மக்கள் தொகையை கொண்டு உள்ளன.
கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் தலைமை தாங்கி அங்கு ஜி20 மாநாடு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு இந்தியா அதற்கு தலைமை தாங்கி டெல்லியில் மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்துகொள்வதற்காக செப்டம்பர் 7 ஆம் தேதி வருகை தருகிறார். 3 நாட்கள் அவர் இந்தியாவில் தங்குகிறார். ஆனால் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப்போவது இல்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications