டிஷ்யூம்! நடு ரோட்டில் குடுமிப்பிடி சண்டை.. கட்டி உருண்ட கல்லூரி மாணவிகள்.. வேடிக்கை பார்த்த கூட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நடு ரோடு என்றும் பாராமால் கல்லூரி மாணவிகள் 2 பேர் குடிமிப்பிடி சண்டை போடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. யார் நன்றாக டேன்ஸ் ஆடுகிறார்க்ள் என்பதில் ஏற்பட்ட பிரச்சினையால் தான் WWE வீரர்களையே மிஞ்சும் அளவுக்கு இந்த இரண்டு இளம்பெண்களும் சண்டை போட்டார்களாம்.

சமூக வலைத்தளங்களில் தினமும் எதாவது ஒரு வீடியோ டிரெண்ட் ஆகி விடும். வித்தியாசமான சம்பவங்கள், காமெடியான நிகழ்வுகள் என தினமும் ஏதாவது ஒரு விஷயம் டிரெண்ட் ஆகி நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகிவிடும்.

Fierce Fight between two college girls in Delhi Video trends among Netizens

அந்த வகையில், இன்று காலையில் இருந்தே இணையத்தில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. WWE வீரர்களையே மிஞ்சும் அளவுக்கு இரு இளம்பெண்கள் குடுமிப்பிடியை பிடித்துகொண்டுவது தான் இந்த வீடியோ வைரலாக காரணம். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

இளம்பெண்கள் சண்டை: டெல்லியில் உள்ள தேஷ்பந்து கல்லூரியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. வழக்கம் போல கல்லூரி நேரத்தில் மாணவர்கள் திடீரென்று கும்பலாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வளவு கூட்டம் நிற்கிறதே.. அப்படி என்னதான் நடக்கிறது என்று பார்த்தால் இரண்டு இளம் பெண்கள் தங்களுக்குள் ஆவேசமாக மோதிக்கொண்டனர்.

வேடிக்கை பார்த்த மாணவர்கள்: ஒருவர் முடியை ஒருவர் பிடித்து ஆக்ரோஷமாக மோதிக்கொள்கிறார்கள். சுற்றிலும் நிற்கும் கூட்டத்தில் ஒருவர் கூட சண்டையை பிரித்து விட்டு சமாதானப்படுத்த வரவில்லை. மாறாக கூட்டத்தில் நின்று வேடிக்கை பார்த்த சிலர் சிரித்துக்கொண்டே நின்றனர். சில வினாடிகளே ஓடக் கூடிய வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல பரவிவருகிறது.

முதலில் வாக்குவாதத்தில் ஈடுபடும் பெண்கள் அடுத்த சில வினாடிகளில் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் ஆக்ரோஷமாக தாக்கிய பெண் ஒருவர் மற்றொரு பெண்ணை கீழே பிடித்து தள்ளினார். இத்தனை சம்பவங்களையும் கைகட்டி நின்று கொண்டு மாணவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நெட்டிசன்கள் விமர்சனம்: இந்ந வீடியோதான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கல்லூரி விழாவில் யார் சிறப்பாக டேன்ஸ் ஆடுகிறார்கள் என்பதில் இந்த சண்டை வெடித்ததாக நெட்டிசன் ஒருவர் பதிவிட்டு இருக்கிறார். இதற்கு பதிலளித்த நெட்டிசன், இருவருக்கும் ஆடத் தெரியுமோ என்னவோ, நன்றாக சண்டை போடுகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

WWE சண்டை போல: அதேபோல் ஒரு நெட்டிசன் ஒருவர் கூறுகையில், குத்துச்சண்டை வீரர்களையே மிஞ்சும் அளவுக்கு மோதுகிறார்களே என ஸ்மைலியுடன் பதிவிட்டுள்ளார். இளம்பெண்கள் சண்டையிட்டுக்கொள்ளும் இந்த வீடியோ லட்சக்கணக்கான வியூஸ்களை தாண்டி வேகமாக பரவி வருகிறது. கமெண்ட்ஸ்களும் அதிகம் வந்துகொண்டே இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+