கோப்பையை வென்ற அர்ஜென்டினா.. "சொர்க்கத்தில் மாரடோனாவுடன் கைகுலுக்கிய மெஸ்ஸி"! டிரென்டாகும் Paradise!
டெல்லி: உலக கோப்பையை அர்ஜென்டினா வென்றதற்கு மெஸ்ஸியுடன் இணைந்து சொர்க்கத்தில் உள்ள மாரடோனாவும் விளையாடினார் என்பதை குறிக்கும் சொல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது. நவம்பர் 4 ஆம் தேதி கத்தாரில் தொடங்கிய இந்த போட்டியில் 32 கால்பந்து அணிகள் 8 குழுக்களாக பங்கேற்றன. ஒவ்வொரு குழுவிலும் 4 அணிகள் இடம் பெற்றன. இந்த போட்டியில் இந்தியா பங்கேற்கவில்லை. நேற்றைய தினம் பிரான்ஸும் அர்ஜென்டினாவும் இறுதி போட்டியை விளையாடின. அப்போது அர்ஜென்டினா கோல் அடித்ததன் மூலம் லியோனல் மெஸ்ஸி மிகப் பெரிய சாதனையை படைத்தார்.
பிபா உலக கோப்பை வரலாற்றில் ஒவ்வொரு நாக் அவுட் போட்டியிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அர்ஜென்டினா வீரரான லியோனல் மெஸ்ஸி படைத்துள்ளார்.

அற்புதம்
ஒவ்வொரு சுற்றிலும் அற்புதமாக ஆடிய மெஸ்ஸி இறுதி போட்டியில் தனது அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்தார். அர்ஜென்டினா கால்பந்து வரலாற்றில் பீலே, மாரடோனா ஆகியோருக்கு பிறகு கால்பந்து அணியை தலைமையேற்று நடத்தும் மெஸ்ஸி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றுள்ளார். பிரான்ஸுக்கு எதிரான இறுதி போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் வரை சென்று 4-2 என்ற கணக்கில் வென்றது அர்ஜென்டினா.

கால்பந்து போட்டி
இந்த கால்பந்து போட்டியில் சிறந்த தொடர் நாயகனுக்கான விருது அர்ஜென்டினாவின் கேப்டன் மெஸ்ஸிக்கு கோல்டன் பால் விருது கிடைத்தது. இவர் உலக கோப்பையில் இரண்டாவது முறையாக இந்த விருதை பெற்றார். 36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா அணி உலக கோப்பையை வென்றுள்ளது. மெஸ்ஸிக்கு 35 வயதாகிறது. இதற்கு முன்னர் அர்ஜென்டினா கால்பந்து அணியை தலைமையேற்று வழிநடத்திய மாரடோனா கடைசியாக கோப்பையை வென்றார்.

உலக கோப்பை
அத்துடன் இப்போதுதான் உலக கோப்பையை அர்ஜென்டினா வென்றுள்ளது. உலகம் முழுக்க இந்த போட்டியை நேற்றைய தினம் கண்டு களித்தனர். அபார்ட்மென்ட்களில் உள்ள மைதானத்தில் புரொஜெக்டர் வைத்து பெரிய டிவியில் மேட்ச் ஒளிபரப்பப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரவாரத்துடன் கண்டு களித்தனர். பெனால்டி சுற்றில் அர்ஜென்டினா வரிசையாக 4 கோல்களை போட்டது. ஆனால் பிரான்ஸ் 2 கோல்களை மட்டுமே போட்டது. இதனால் அர்ஜென்டினா சாம்பியனானது. அர்ஜென்டினா அணிக்கு இந்திய மதிப்பில் 344 கோடி ரூபாய் பரிசு தொகையாக ஃபிஃபா வழங்கியது. பிரான்ஸ் அணிக்கு இந்திய மதிப்பில் 245 கோடி ரூபாய் வழங்கியது. இது மட்டுமல்லாமல் இறுதி சுற்றுக்கு வந்த 4 அணிகளுக்கும் தலா ரூ 138 கோடி ரூபாயும் பரிசு கிடைத்துள்ளது.

வர்ணனை
இந்த போட்டியை வர்ணனை செய்து வந்தவர், "Lionel Messi has shaken hands with paradise" என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அதாவது இந்த முறை உலக கோப்பையை அர்ஜென்டினா வென்றதற்கு மாரடோனாவின் ஆசியும் ஒரு காரணம் என அவரை நினைவுப்படுத்தும் வகையில் சொர்க்கத்தில் இருக்கும் மாரடோனாவுடன் கைகோர்த்து மெஸ்ஸி இத்தகைய சாதனையை படைத்தார் என்ற அர்த்தத்தில் அந்த கமென்டேட்டர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனந்த கண்ணீர்
இதனால் மேற்கொண்ட சொற்றொடர் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று எல்லார் வீடுகளிலும் கால்பந்து இறுதி போட்டியை கண்டு களித்தனர். பிரான்ஸ் அணி தோற்ற போது மெபாபே மைதானத்தில் அழுதார். அவரை பிரான்ஸ் அதிபர் மெக்ரான் சமாதானப்படுத்தினார். ஒரு பக்கம் மெஸ்ஸி ஆனந்த கண்ணீர் விடுத்தார் என்றால் மறுபக்க் மெபாபே தோல்வியால் கண்ணீர் விட்டார். அவரை சக வீரர்கள் ஆசுவாசப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications