இதுதான் ஆரோக்கியமான அரசியல்.. மன்மோகன் சிங்கை சந்தித்த நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மரியாதை நிமித்தமாக இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பட்ஜெட் குறித்து ஆலோசனை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக உள்ளார். கடந்த முறை பாதுகாப்பு துறை அமைச்சராகஇருந்த நிர்மலா சீதாராமன், அருண் ஜெட்லி அமைச்சராக மறுத்த காரணத்தால் நிதியமைச்சர் ஆகி உள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை வரும் ஜுலை 8ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இதனால் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள், திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து மாநில நிதியமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதை தொடர்ந்து பொதுமக்களிடமும் கருத்து கேட்டு நிதியைமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் இருந்தும் பல்வேறு யோசனைகளை கேட்டு வருகிறார்.
இந்த சூழலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, நிர்மலா சீதாராமன் அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார். அப்போது பட்ஜெட் குறித்து ஆலோசனைகளை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. மரியாதை நிமித்தமாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நெட்டினசன்கள் பலர் இது ஆரோக்கியமான அரசியல் என்று பாராட்டி உள்ளார்கள். நிதித்துறை அனுபவம் மிக்க மன்மோகன் சிங்கை சந்தித்து மத்திய பட்ஜெட் குறித்து ஆலோசித்ததை பாராட்ட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications