"இந்தியாவில் ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ளதாக கூறும் அறிக்கை பிழையானது!" மறுக்கும் நிர்மலா சீதாராமன்
டெல்லி: உலக சமத்துவமின்மை குறித்து World Inequality Lab வெளியிட்டுள்ள அறிக்கையைப் பிழையானது நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார்.
World Inequality Lab எனப்படும் உலக சமத்துவமின்மை ஆய்வகம் உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் பல்வேறு நாடுகளில் உள்ள சமத்துவமின்மை குறித்தும் விளக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையில் இந்தியாவை ஒரு "ஏழை மற்றும் மிகவும் சமமற்ற" நாடு என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.

World Inequality Lab
World Inequality Lab என்ற இந்த அறிக்கையில் கடந்த 2021ஆம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த தேசிய வருமானத்தில் 5இல் ஒரு பங்கு நாட்டில் இருக்கும் 1 சதவிகித மக்களுக்கே செல்வதாகக் கூறப்பட்டு இருந்தது. நாட்டில் ஏழ்மை நிலையில் உள்ள பாதிப் பேரது வருமானம், நாட்டின் வருமானத்தில் 13 சதவிகிதமாக உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ 2,04,200ஆக உள்ளது. மக்கள்தொகையில் கீழே உள்ள 50 சதவீதம் பேரின் மக்கள்தொகை ரூ 53,610 ரூபாயாக உள்ளது.

டாப் 10 சதவீதம்
அதேநேரம் நாட்டின் டாப் 10 சதவீதம் பேரின் ஆண்டு வருமானம் இதைவிட 20 மடங்கு அதிகமாக அதாவது ரூ 11,66,520ஆக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையேயான வருமான இடைவெளி மிக அதிகமாக உள்ளது. அதேநேரம் ஸ்வீடன் போன்ற நாடுகளில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையேயான வருமான இடைவெளி குறைவாகவே உள்ளது. கொரோனா பெருந்தொற்று பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான வருமான இடைவெளியை அதிகரித்துள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்த அறிக்கை குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்," இந்தியாவை ஏழை மற்றும் மிகவும் சமத்துவமற்ற நாடு என்று கூறும் உலக சமத்துவமின்மை அறிக்கையில் பல பிழைகள் உள்ளன. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கடன் வாங்கி திரும்பச் செலுத்தாமல் பலரும் கடனை வாரக்கடனாக மாற்றிவிட்டனர். ஐக்கிய முற்போக்கு ஆட்சி அவர்களிடம் இருந்து வராக்கடனை மீட்டெடுக்கத் தவறிவிட்டனர்" என்று அவர் தெரிவித்தார்.

வரக்கடன்
வரக்கடன் குறித்து திமுக எம்பி டிஆர் பாலுவின் கேள்விக்குப் பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "கடன்களைத் தள்ளுபடி செய்வது என்றால் முழுமையான தள்ளுபடி என்று அர்த்தமல்ல. நிலுவைத் தொகையை வசூலிக்க வங்கிகள் கடன் பெற்ற அனைவரையும் பின்தொடர்ந்தே வருகின்றனர். வரலாற்றில் முதல்முறையாக நரேந்திர மோடி ஆட்சியில், வரக்கடனை அறிவிக்கப்பட்ட பல கடன்களை வங்கிகள் மீண்டும் திரும்பப் பெற்றுள்ளன. யுபிஏ ஆட்சியில் வரக்கடன்கள் எதுவுமே மீட்கப்படவில்லை" என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications