ரூ.2000 வரையிலான UPI பணப்பரிவர்த்தனைக்கு.. 18% ஜிஎஸ்டி வரியா? முடிவை ஒத்தி வைத்தது மத்திய அரசு
டெல்லி: யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படலாம் என்று பேசப்பட்டு வந்த நிலையில், இது தொடர்பாக இன்றை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், ஜிஎஸ்டி வரி குறித்து கவுன்சில் கூட்டத்தில எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
டிஜிட்டல் இந்தியா என்பதை கடந்த 2014ம் ஆண்டிலிருந்து மத்திய அரசு தீவிரமாக கட்டமைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக யுபிஐ பேமென்ட் இருந்து வருகிறது. அதாவது கடைக்கு போகும் மக்கள் முன்பு கையில் சில்லரையை எடுத்துக்கொண்டு போனார்கள். ஆனால், இப்போது செல்போனை எடுத்துச்செல்கிறார்கள். செல்போனிலிருந்து கூகுள் பே, போன் பே, பேடிஎம் என பல வழிகளில் பணத்தை செலுத்தி பொருட்களை வாங்கி வருகிறார்கள்.

பொட்டிக்கடைகள் தொடங்கி, நகைக்கடைகள் வரை எல்லா இடங்களிலும் இந்த யுபிஐ பேமெனட் வசதி வந்துவிட்டது. யுபிஐ பேமெனட் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், இதன் மூலம் நடைபெறும் பணப்பரிவர்த்தனை தொடர்ந்த அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரூ.2000க்கு குறைவாக செய்யப்படும் யுபிஐ பேமென்ட்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று தகவல்கள் வேகமாக பரவின.
பணப்பரிவர்த்தனையை எளிதாக்கிய இந்த யுபிஐ பேமென்ட்டுக்கும் ஜிஎஸ்டியா? என சமானிய மக்கள் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். அதாவது, இந்தியாவில் 80% UPI பரிவர்த்தனைகள் ரூ.2000 என்கிற அளவில் நடக்கிறது. இப்படி இருக்கும்போது இதுக்கும் ஜிஎஸ்டி போட்டால் என்ன செய்வது? என்று பல்வேறு தரப்பினர் அதிருப்பதி தெரிவித்திருந்தனர்.
மட்டுமல்லாது, ஜம்மு காஷ்மீர், ஹரியானா உட்பட நான்கு மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில் UPI பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டியை அமல்படுத்தினால் பஞ்சாயத்து வெடிக்கும் என்பதை மத்திய அரசு உணர்ந்திருந்தது.
இந்நிலையில், டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், இன்று நடந்த 54வது GST கவுன்சில் கூட்டத்தில், இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது. இந்த கூட்டத்தில், 18% ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து நல்வாய்ப்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் சில்லறை வணிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.
மறுபுறம், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்திருக்கும் நிலையில், அதை தவிர்த்துவிட்டு, சில்லறை வர்த்தகத்தின் அங்கமாக மாறிப்பான UPI பரிவர்த்தனைகளுக்கு ஜஎஸ்டி விதிப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications