டெல்லியை புரட்டியெடுத்த மழை.. வெள்ளம் பாதித்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம்.. கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவியாக வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இமாசல பிரதேசம், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் யமுனை ஆற்றில் நீரின் அளவு அதிகரிக்க தொடங்கியது. டெல்லியில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் வெள்ளம் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

யமுனை நதிக்கரையோரம் உள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ராஜ்காட் பகுதி, டெல்லி சட்டசபை பகுதி, செங்கோட்டை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு உள்ள சாலைகளில் கூட தண்ணீர் தேங்கி உள்ளது. யமுனை நதியின் கரையோரம் வசித்த மக்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ரூ. 10 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கெஜ்ரிவால் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- யமுனை ஆற்றங்கரையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சில குடும்பத்தினரின் வீட்டு உபயோக பொருட்கள் முழுவதும் வெள்ளத்தில் அடித்து செல்லபப்ட்டது. வெள்ளத்தால் ஆவணங்கள் இழந்திருந்தல் சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்படும். டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவியாக அளிகப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications