குபுகுபுவென கிளம்பிய புகை.! டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. பதறிய நோயாளிகள்
டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எண்டோஸ்கோபி வார்டில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து அந்த வார்டில் இருந்து நோயாளிகள் உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் எண்டோஸ்கோபி வார்டில் தீப்பிடித்துள்ளது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரியத்தொடங்கியது. இதனால் அங்கிருந்த நோயாளிகள் பதற்றமடைந்தனர்.

தீ விபத்தை அடுத்து உடனடியாக தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்து நோயாளிகளை பத்திரமாக மீட்டு அவசர அவசரமாக வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். தீ மற்ற இடத்திற்கு பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளிலும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்து காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனை வளாகம் முழுவதும் கரும்புகை பரவி வருகிறது. இந்த தீ விபத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து விசாரிக்க விசாரணைக்குழு ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications