டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு
டெல்லி: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தமிழக முதல்வர் தங்கியிருந்த நிலையில், அங்குள்ள கேண்டீனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் விஜய் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. மின் கசிவு காரணமாக தீப்பற்றியதாக கூறப்படும் நிலையில், தீயை உடனடியாக அணைத்ததால் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள கேண்டீனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏசி இயந்திரத்தில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் சேதம் எதுவும் இல்லை என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் விஜய் அங்கு சென்றுள்ளார்.

நேற்று டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில்தான் முதல்வர் விஜய் தங்கியிருந்தார். இன்று காலை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க விஜய் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில், கேண்டீனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதல்வர் விஜய் டெல்லி சென்றுள்ள நிலையில், அங்கிருக்கும் தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.













Click it and Unblock the Notifications