ஸ்மார்ட் ஆகும் இந்தியா.. மொத்தம் 22 நகரங்கள்.. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் ஏழு! அடுத்த மாதம் ரெடி
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 22 தமிழக நகரங்களில் பணி அடுத்த மாதம் நிறைவடைகிறது.
டெல்லி: மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட நகரங்களை மேம்படுத்தி வருகிறது.. இதற்கிடையே அதில் 100 நகரங்களில் 22இல் பணிகள் முழுமையாக அடுத்த மாதம் நிறைவடைகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் முக்கிய நகரங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டமும் தொடங்கப்பட்டது.
மத்திய அரசு முன்னெடுத்துள்ள இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், நகரில் முக்கிய உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் நகரங்களை மேம்படுத்த மத்திய அரசு தனியாக நிதியையும் ஒதுக்கியிருந்தது.

ஸ்மார்ட் சிட்டி
இதற்கிடையே சென்னை, புனே உள்ளிட்ட 22 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அனைத்து பணிகளும் அடுத்த மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் இருக்கும் மற்ற 78 நகரங்களில் நடந்து வரும் திட்டங்கள் அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் முடிக்கப்படும் என்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த நகரங்களிலும் தேவையான கட்டுமான பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.

100 நகரங்கள்
கடந்த 2015 ஜூன் 25ஆம் தேதி மோடி அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அறிவித்தது. இதையடுத்து 2016 முதல் 2018 வரை நான்கு சுற்றுகள் மூலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த நகரங்களில் முக்கிய உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டது.. அதில் வாழும் மக்களுக்கு வாழ்க்கைத் தரம் மற்றும் சுத்தமான மற்றும் நிலையான சூழலை உறுதி செய்யவும் மேம்படுத்தவும் ஸ்மார்ட் தீர்வுகளை வழங்குவதே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நோக்கமாகும்.

தமிழ்நாட்டில் இருந்து 7 நகரங்கள்
இத்திட்டத்தில் இடம்பெற்ற 100 நகரங்களில் 22இல் பணிகள் முழுமையாக அடுத்த மாதம் நிறைவடைகிறது. போபால், இந்தூர், ஆக்ரா, வாரணாசி, புவனேஸ்வர், காக்கிநாடா, புனே, அமராவதி உள்ளிட்ட 22 நகரங்கள் மார்ச் மாதத்திற்குள் அனைத்து ஸ்மார்ட் சிட்டி திட்டங்களும் நிறைவடைகிறது. இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் - சென்னை, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், மதுரை, திருச்சி, தஞ்சை என்று 7 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது இந்த 7 நகரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் அடுத்த மாதம் நிறைவடைகிறது.

ஒரே மாதம்
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டக் கட்டுமானம் இறுதிக் கட்டத்தில் உள்ளது. மார்ச் மாதத்திற்குள் இந்த 22 ஸ்மார்ட் சிட்டிகளில் அனைத்து பணிகளும் முடிந்துவிடும்.. அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில், மீதமுள்ள நகரங்களின் பணிகளை நாங்கள் முடிப்போம்" என்றார்.. ஸ்மார்ட் சிட்டி திட்டங்களைத் தனியாகச் சிறப்புக் குழு ஒன்று தான் திட்டமிடுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டங்களைத் திட்டமிடுவது, செயல்படுத்துவது, கண்காணிப்பது, என்று அனைத்தையும் இந்த குழு தான் மேற்கொள்கிறது.

மத்திய அரசு
கடந்த பிப்ரவரி 6இல் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய வீட்டுவசதி துறை இணை அமைச்சர் கவுஷல் கிஷோர், "கடந்த ஜனவரி 27 வரை, ஸ்மார்ட் சிட்டி மிஷனில் ரூ. 1,81,322 கோடி மதிப்பிலான 7,804 திட்டங்களை ஆரம்பித்தோம். அதில் 98,796 கோடி மதிப்பிலான 5,246 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. மத்திய அரசு இத்திட்டத்திற்காக ரூ. 36,447 கோடியை விடுவித்துள்ள நிலையில், அதில் ரூ 32,095 கோடி (88 சதவீதம்) பயன்படுத்தப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

ஸ்மார்ட் சிட்டி
இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ₹ 48,000 கோடி அளவுக்கு நிதியுதவி அளிக்கும். அதாவது ஒரு நகருக்கு ஆண்டுக்கு ₹ 100 கோடி என்ற விகிதத்தில் நிதிய அளிக்கும். மத்திய அரசு ஒதுக்கும் நிதிக்குச் சமமான தொகையை மாநில அரசு அல்லது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு இந்தத் திட்டங்களுக்கு அளிக்கும். இப்போது இத்திட்டத்தின் கீழ் 100 நகரங்கள் உள்ளன. இதில் மேலும் சில நகரங்களை மத்திய அரசு இணைக்கலாம் என்று கூறப்பட்டது. இருப்பினும், மத்திய அரசுக்கு புதிய நகரங்கள் இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications