போடறா வெடிய.. ராயல் என்ஃபீல்டுக்கு பெட்ரோல் போட்டு முடியலையா! வந்தாச்சு கலக்கல் தீர்வு! மைலேஜ் என்ன?
டெல்லி: பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இப்போது ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்திடம் இருந்து வந்துள்ள செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விண்ணை முட்டும் விலையில் உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவே இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை எரிபொருளுக்கே செலவழிக்க வேண்டி உள்ளது. அதிலும் ராயல் என்ஃபீல்டு, டியூக் போன்ற வண்டிகளை வைத்திருப்பவர்கள் குறித்து தனியாகச் சொல்லத் தேவையில்லை.

ராயல் என்ஃபீல்டு
அதிலும் ராயல் என்ஃபீல்டு எல்லாம் லிட்டருக்கு 25 -30 கிலோமீட்டர் தான் கிடைக்கும். வெளியே கெத்தாக இருந்தாலும் ராயல் என்ஃபீல்டு உரிமையாளர்களின் மனக்குமுறல் ஒவ்வொரு முறை பெட்ரோல் போடும்போதும் தெரியும். அப்படிப்பட்ட ராயல் என்ஃபீல்டு வண்டி மைலேஜ் அதிகமாகக் கிடைத்தால் எப்படி இருக்கும். அதைவிட பெட்ரோலே போடத் தேவையில்லை என்றால் எப்படி இருக்கும். இது கனவு இல்லை.. விரைவில் நினைவாகப் போகிறது.

சூப்பர் அறிவிப்பு
நாட்டில் இப்போது பெரும்பாலான வாகன நிறுவனங்கள் மின்சார வாகனங்களை வெளியிட்டு வருகின்றன. இந்த துறையில் இப்போது ராயல் என்ஃபீல்டும் சேரப் போகிறது. விரைவில் மின்சாரத்தில் இயங்கும் ராயல் என்ஃபீல்டை வெளியிட உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் சித்தார்த்த லால் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாகத் தீவிர ஆய்வுகளும் பரிசோதனைகளும் நடந்து வருவதால் கொஞ்சக் காலம் எடுத்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

தீவிர ஆய்வு
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் இது தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு உள்ளோம். நகரத்தில் பயணிக்க மின்சார வாகனங்கள் சவுகரியமாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். இதில் நாங்கள் வேறு சில புதிய வடிவமைப்பு முயற்சிகளைச் செய்ய முயல்கிறோம். மின்சாரத்தில் இயங்கும் ராயல் என்ஃபீல்டு பைக்கை நாங்கள் வெளியிடுவோம். ஆனால், அதற்கு எங்களுக்கு கொஞ்ச காலம் தேவை.

எப்போது
இப்போது, எங்களிடம் இருக்கும் ஹண்டர் 350இல் கிளாசிக் ஸ்டைலும் இருக்கும் நவீனத் தொழில்நுட்பமும் இருக்கும். அதேநேரம் ஹிமாலயன் மாடலில் கிளாசிக் தன்மை இருக்காது என்றாலும் ராயல் என்ஃபீல்டு டச் இருக்கும், எளிமையானதாகவும் இருக்கும். இதையெல்லாம் மனதில் வைத்து ராயல் என்ஃபீல்டு ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையிலேயே நாங்கள் எங்கள் முதல் மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்துவோம். இதற்கு 3-4 ஆண்டுகள் ஆகிவிடும்" என்றார்.

எப்படி இருக்கும்
மின்சார வாகனங்களைப் பொறுத்தவரை பேட்டரி திறன் ரொம்பவே முக்கியம். ராயல் என்ஃபீல்டு வாகனத்தில் பொறுத்த பெரிய சைஸ் பேட்டரியை உற்பத்தி செய்வதிலும் அந்நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. 650 சிசி பைக்குகளுக்கு சமமான மின்சார வாகனத்தைத் தயாரித்தால் அது பயனாளிகளுக்கும் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும் என்று ராயல் என்ஃபீல்டு கருதுகிறது. இதனால் 350 cc பைக்களுக்கு இணையான செயல்திறனை வழங்கும் பைக்கை தயாரிக்க ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது.

ஒரு முறை
இந்த மின்சாரத்தில் இயங்கும் ராயல் என்ஃபீல்டு ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 120 கிமீ வரை செல்ல முடியும். இதில் பல புதிய முயற்சிகளையும் ராயல் என்ஃபீல்டு மேற்கொள்ள உள்ளது. அதேபோல வேகமாக வளரும் மின்சார வாகனச் சந்தையிலும் ஒரு வலுவான இடத்தை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கேற்ப வண்டியை உருவாக்கி வருகிறது ராயல் என்ஃபீல்டு!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications