இதான் பாஜக.. "முடிஞ்சிடுச்சு" போல.. இதுதான் புதிய நாடாளுமன்ற கட்டிடம்.. அல்ட்டிமேட் காட்சியை பாருங்க
டெல்லி: மொத்த எதிர்க்கட்சிகளுமே, புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்க போவதாக சொல்லிவரும் நிலையில், அந்த நாடாளுமன்ற கட்டிடத்தின் தோற்றமும், வடிவமும் வீடியோவாக தற்போது வெளியாகி உள்ளது.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புறக்கணிக்கப்படுவதாக, அதனைக் கண்டிக்கும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் உச்சம் பெற்றுள்ளது.
வருகிற மே 28-ம் தேதியன்று புதிய நாடாளுமன்றத்துக்கான கட்டிடங்கள் திறந்துவைக்கப்பட உள்ளன.. பிரதமர் மோடி இந்த கட்டிடத்தை திறந்துவைக்கிறார்..

கண்டனம்:
அப்போது, சபாநாயகர் இருக்கைக்கு அருகே தமிழகத்தின் பாரம்பரிய செங்கோலையும் வைக்கவுள்ளார். ஆனால், இந்த விழாவில் பிரதமர் மோடி மட்டுமே முன்னிறுத்தப்படுவதாகவும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புறக்கணிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றன... மேலும், இந்த நடைமுறை, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் போர்க்கொடி தூக்கி வருகின்றன..
இவ்வளவு எதிர்ப்புகளையும், சர்ச்சைகளையும் கிளப்பிவரும், அந்த புதிய பாராளுமன்றம் எப்படி இருக்கிறது? அந்த கட்டிடத்துக்குள் என்னென்ன வசதிகள் உள்ளன? என்பதெல்லா மிகப்பெரிய எதிர்பார்ப்பாக எழுந்து வந்தன..
இடவசதிகள்:
இப்போதுள்ள பாராளுமன்றத்தில் இட வசதி இல்லை என்றே பரவலாக சொல்லப்பட்டது.. இடவசதியை தவிர, மின்சார கட்டமைப்புகள், ஏசி வசதி, விளக்குகள் வசதி, ஆடியோ விஷுவல் போன்ற வசதிகளும், இப்போதைய காலக்கட்டத்துக்கு ஏற்றவாறு இல்லையாம்.. அதேபோல, நிலநடுக்கம், தீ விபத்து பேரிடர்கள் ஏற்பட்டால் எம்.பிக்கள், ஊழியர்கள் வெளியேறுவதற்கான எமர்ஜென்சி வசதியும் அவ்வளவா இல்லையாம்..

இந்த குறைகள் எல்லாம் எதுவும் இல்லாதவாறு, தாராளமான வசதியுடன் புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.. டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் இதை கட்டமைத்துள்ளது. மொத்தம் 65 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது... ரூ.850 கோடிக்கும் மேல் செலவு செய்யப்பட்டுள்ள, முக்கோண வடிவில் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது..
பாராளுமன்ற கட்டிடம்:
இப்படிப்பட்ட சூழலில், புதிய பாராளுமன்ற கட்டிட அமைப்பின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.. இந்த வீடியோவில், ஒன்றரை நிமிடங்களுக்கு ஓடும் அந்த வீடியோவில், பாராளுமன்றத்தின் பிரம்மாண்டமான தோற்றம் காட்டப்படுகிறது.. ஓங்கி உயர்ந்த கட்டிடங்களுக்கு இணையாக குளுகுளு மரங்களும், அந்த கட்டிடங்களின் ஒவ்வொரு வாயில்களிலும் தென்படுகின்றன..
பிறகு ஒரு அரங்கு காட்டப்படுகிறது.. அதனுள் நிறைய இருக்கைகள் போடப்பட்டுள்ளன.. வண்ண வண்ண விளக்குகள் எரிய விடப்பட்டுள்ளன.. நடக்கும் நிகழ்வுகளை, அங்கிருந்தபடியே பார்க்கும்படியாக, சுவர்களில், மிகப்பெரிய திரைகள் பொருத்தப்பட்டுள்ளன.. இதையடுதது, சபை நடக்கும் அவை காட்டப்படுகிறது.. ஒவ்வொரு நாற்காலிகளுக்கும் தாராளமான இடங்கள் தென்படுகின்றன..
பார்ப்பதற்கே நெருக்கடி இல்லாமல், விசாலமாகவும், தாராளமாகவும் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.. மேசைகள், நாற்காலிகள் என அனைத்திலுமே நுட்பமான கலை வேலைப்பாடுகள் தென்படுகின்றன.. தரைவிரிப்பான்களோ, பச்சை கலரில் பளிச்சிடுகின்றன..

கலர்புல் அறைகள்:
இதற்கு பிறகு ராஜ்யசபா நடக்கும் அவை வீடியோவில் காட்டப்படுகிறது.. இங்கு சிவப்பு கலரில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.. இளஞ்சிவப்பு நிறத்தில் தரை விரிப்பான்கள் காணப்படுகின்றன.. பார்ப்பதற்கே இந்த அறை கலர்புல்லாக தெரிகிறது.. இதைத்தவிர, அரசியல் சாசன மண்டபம், உறுப்பினர்களுக்கான ஓய்வறைகள், லைப்ரரி, பார்க்கிங் வசதி, நிலைக்குழு விசாரணை அறைகள், உணவு அருந்தும் பகுதி, என சகலமும் இந்த கட்டிடத்துக்குள் இருக்கின்றன.
ஏற்கனவே செய்திகள் வந்ததுபோல, மொத்தம் 888 உறுப்பினர்கள் இங்கு வசதியாகவே உட்காரலாம் என்று தெரிகிறது.. 2 அவைகளின் கூட்டுக்கூட்டம் நடத்தப்பட்டாலும்கூட, 1,280 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளதும் இந்த வீடியோவில் காண முடிகிறது... மொத்தத்தில், இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடமானது, அழகியலும், நவீனமும் கலந்து தலைநகரில் பிரம்மாண்டமாக காட்சி தந்து கொண்டிருக்கிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications