"மிரட்டறீங்களா".. பாஜகவை அதிர வைத்த சோனியா.. டக்கென திரும்பி பார்க்கும் ஆம் ஆத்மி.. அதிரும் டெல்லி
காங்கிரஸ் எம்பிக்களுக்கு சோனியா காந்தி அட்வைஸ் தந்துள்ளார்
டெல்லி: அனைத்து மட்டத்திலும் ஒற்றுமை மிகவும் அவசியம் என்று இன்று நடந்த காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில், அக்கட்சி தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
நடந்துமுடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது.. எதிர்பார்த்தபடியே பாஜக பெருவாரியான வெற்றிகளை பெற்றுவிட்டது.
அதேபோல ஆம் ஆத்மி, அடுத்த வெற்றியை பெற்றுள்ளது.. குறிப்பாக, காங்கிரசின் கோட்டைகளான டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களை ஆம் ஆத்மி கைப்பற்றி வருகிறது..

பாஜக
இது நூற்றாண்டு கால காங்கிரசுக்கு பெருத்த அவமானம் ஏற்பட்ட நிலையில், தற்போது அக்கட்சி எம்பிக்களை ஒன்றுகூடி அழைத்து விவாதிக்க மேலிடம் முடிவு செய்தது.. அதன்படியே, 5 மாநில தோல்விக்கு பிறகு, முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் கூட்டம் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இந்த கூட்டம் நடந்து வருகிறது.. கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்து வரும் இந்த கூட்டத்தில் கட்சியின் மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பெட்ரோல் விலை
மேலும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நடப்பு அரசியல், முக்கிய பிரச்சினைகள், இரு அவைகளிலும் செயல்படும் விதம் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டது.. பெட்ரோல்-டீசல், கேஸ் சிலிண்டர் போன்றவைகளின் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய அரசு செவி கொடுக்காத நிலையில், நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையை தீவிரமாக கையில் எடுப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

கூட்டம்
மேலும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளதால், இதுகுறித்தும் எம்பிக்களிடம் விவாதிக்கப்பட்டுள்ளது. இறுதியில் காங்கிரஸ் எம்பிக்களிடம் சோனியா பேசும்போது தேர்தல் தோல்வி குறித்த தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.. அத்துடன் எம்பிக்களுக்கு சில அறிவுரைகளையும் சோனியா காந்தி தன் உரையில் வழங்கினார்.

அறிவுரை
"சமீபத்திய தேர்தல் முடிவுகளில் நீங்கள் அனைவரும் எவ்வளவு ஏமாற்றம் அடைந்தீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்... அவை அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் நமக்கு உள்ளன.. அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாடு, போன்றவை கடுமையான சோதனைக்கு உட்பட்டுள்ளன... இப்போதைக்கு அனைத்து மட்டங்களிலும் ஒற்றுமை மிக முக்கியமானது.. அதைதான் நாம் உறுதிப்படுத்த வேண்டி உள்ளது. அதனை உறுதிப்படுத்த அனைத்தையும் செய்ய தயாராக உள்ளேன் இனி வரும் காலம், முன்பை விட மிகவும் சவாலானது.. "சமீபத்திய தேர்தல் முடிவுகளில் நீங்கள் அனைவரும் எவ்வளவு ஏமாற்றம் அடைந்தீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்... அவை அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் எனக்கு உள்ளன.. அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாடு, போன்றவை கடுமையான சோதனைக்கு உட்பட்டுள்ளன... இப்போதைக்கு அனைத்து மட்டங்களிலும் ஒற்றுமை மிக முக்கியமானது.. அதைதான் நாம் உறுதிப்படுத்த வேண்டி உள்ளது. இனி வரும் காலம், முன்பை விட மிகவும் சவாலானது.. மறுமலர்ச்சி என்ற ஒன்று இங்கு கட்டாயம் நமக்கு தேவை.. இது கட்சிக்கு மட்டுமல்ல, நமது ஜனநாயகத்திற்கும், இந்த சமூகத்திற்கும் அத்தகைய மறுமர்ச்சி மிகவும் அவசியமானது" என்றார்.

புத்துயிர்ப்பு
புத்துயிர் பெறுவது என்பது இங்கு கட்டாயம் நமக்கு தேவை.. இது கட்சிக்கு மட்டுமல்ல, நமது ஜனநாயகத்திற்கும், இந்த சமூகத்திற்கும் அத்தகைய புத்துயிர்ப்பு மிகவும் அவசியமானது... நமது செயல்பாடு குறித்து காங்கிரஸ் செயற்குழு ஆலோசனை நடத்தியது. நிர்வாகிகளுடன் நானும் ஆலோசனை நடத்தினேன். கட்சியை பலப்படுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வந்துள்ளன. அது குறித்து பணியாற்றி வருகிறேன்.

பன்முகத்தன்மை
பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்பிக்கள் கலந்து கொண்டு கட்சியின் கருத்துகளை சொல்லி இருக்கிறீர்கள்.. பார்லிமென்டின் இரு அவைகளிலும் மக்கள் நலன் சார்ந்த விஷயங்கள் எழுப்பிய நிலையிலும் அரசின் நடவடிக்கைகள் கொஞ்சமும் மாறவில்லை.. மக்களை பிரித்தாளும் கொள்கையில் ஆளுங்கட்சி ஈடுபட்டு வருகிறது.. இந்த தேசத்தின் வரலாறு சிதைக்கப்படுகிறது... இந்த நாட்டின் பன்முகத்தன்மை என்பது பல நூற்றாண்டுகளாக உள்ளது..

நல்லிணக்கம்
அத்தகைய பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தை நிலைநிறுத்தி வளப்படுத்திய நல்லிணக்கத்தை சேதப்படுத்த அனுமதிக்க மாட்டோம். எதிர்க்கட்சிகளையும், அதன் தலைவர்களையும் குறிவைத்து அரசு இயந்திரங்கள் செயல்படுகின்றன.. ஆனால் ஒன்று சொல்லி கொள்கிறேன், ஆளுங்கட்சியின் அப்பட்டமான அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல்கள் நம்மை பயமுறுத்தவோ அல்லது அமைதிப்படுத்தவோ முடியாது... நாமும் பயப்பட மாட்டோம்" என்றார் சோனியா காந்தி.












Click it and Unblock the Notifications