Solar Eclipse 2026: இன்று நிகழும் "வளைய" சூரிய கிரகணம்.. சட்டென மங்கலாக மாறும் சூரியன்.. உற்று பார்க்கும் ஆய்வாளர்கள்
Solar Eclipse 2026 (சூரிய கிரகணம்): இன்று பிப்ரவரி 17ம் தேதி ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நடக்கிறது. சூரியனைச் சந்திரன் மறைப்பதால் நிகழும் இந்த சூரிய கிரகணம் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். அழகு மட்டுமின்றி இந்த சூரிய கிரகணங்கள் அறிவியல்பூர்வமாகவும் முக்கியமானதாக மாறி வருகிறது. சூரியன் குறித்த பல ரகசியங்களைத் தெரிந்து கொள்ள இவை உதவியாக இருக்கிறது.
2026ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று, பிப்ரவரி 17 அன்று நிகழ்கிறது. இந்தச் சூரிய கிரகணத்தின்போது, சூரியனின் மையப்பகுதியைச் சந்திரன் மறைத்து, சுற்றிலும் ஒரு "நெருப்பு வளையம்" போன்ற ஒளி வட்டத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாகவே இதை வளையச் சூரிய கிரகணம் என்கிறார்கள். பொதுவாகக் கிரகணங்களுக்கு ஆன்மீக ரீதியாகப் பல காரணங்களைக் குறிப்பிடுவார்கள். அதேபோல அறிவியல் ரீதியாகவும் இதற்கு விளக்கங்கள் இருக்கிறது.

பொதுவாகச் சூரியனைச் சந்திரன் மறைக்கும்போது தான் சூரிய கிரகணம் நிகழ்கிறது. வழக்கமான சூரிய கிரகணத்தில் சூரியனைச் சந்திரன் முழுமையாக மறைக்கும். அதேநேரம் இந்த நெருப்பு சூரிய கிரகணத்தில் சூரியனைச் சந்திரன் முழுமையாக மறைக்காமல், அதன் மையப்பகுதியை மட்டும் மறைக்கும். இதனால் சூரியனின் விளிம்புகள் ஒரு பிரகாசமான மோதிரம் அல்லது நெருப்பு வளையம் போலத் தோன்றும்.
இது பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். அரிய நிகழ்வாகக் கருதப்படும் இது, சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான கரோனாவை உன்னிப்பாக ஆய்வு செய்யவும் ஒரு முக்கிய வாய்ப்பை ஆய்வாளர்களுக்கு வழங்குகிறது. 0.963 தீவிரம் கொண்ட இந்த வளையச் சூரிய கிரகணத்தில், சந்திரன் சிறியதாகத் தோன்றுவதால், சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வளையம் தெளிவாகத் தெரியும்.
இந்த கிரகணம் இந்திய நேரப்படி பிற்பகல் 3:26 மணிக்குத் தொடங்கி, இரவு 7:57 மணி வரை நீடிக்கும். கிரகணத்தின் உச்சக்கட்டம் மாலை 5:42 மணிக்குத் தொடங்கி 5 நிமிடங்கள் வரை இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்! இருப்பினும், இந்தியாவில் இந்தக் கிரகணம் இந்தியாவில் தெரிய வாய்ப்பு இல்லை.. தென் அமெரிக்கா, தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் மட்டுமே இந்த வளையக் கிரகணம் தெரியும்.
இது போன்ற சூரிய கிரகணங்கள் சூரியனின் பிரகாசமான பகுதியை இயற்கையாகவே மறைக்கும். இதனால் எப்போதும் மிகப் பிரகாசமாக இருக்கும் கரோனா மங்கலாகத் தெரியும். இது சூரியன் குறித்த ஆய்வுக்கு மிகச் சரியான வாய்ப்பை வழங்குகிறது. இந்த நேரத்தைப் பயன்படுத்திப் பல மில்லியன் டிகிரி வெப்பமான இதன் வெளிப்புற வளிமண்டலத்தின் அமைப்பு, இயக்கவியல் மற்றும் நிறை உமிழ்வுகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்கின்றனர். இவை சூரிய காந்தப்புலங்கள் மற்றும் வெடிப்புகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
இதன் காரணமாகச் சூரிய கிரகணங்களின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் காலத்தில் விண்வெளி ஆய்வுகளில் இவை மேலும் மேலும் முக்கியமானதாக மாறி வருகிறது. சூரியன் குறித்த பல ரகசியங்களைத் தெரிந்து கொள்ள இவை உதவியாக இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications