ஒரு நாளைக்கு 1 கோடி ரூபாய் அள்ளும் சுங்கச்சாவடிகள் எவை எவை? லிஸ்டில் டாப்பில் உள்ள சுங்கச்சாவடி எது?
டெல்லி: நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து சாலைகள் அமைப்பது மற்றும் சாலை பராமரிப்புக்காக பணம் வசூல் செய்யப்படுகிறது. இதில், நாட்டிலேயே அதிகமாக நாள் ஒன்றிற்கு ரூ.1 கோடிக்கு மேல் வசூல் செய்யும் முதல் ஐந்து சுங்கச்சாவடிகள் எந்த ஊரில் உள்ளன என்பது பற்றி இங்கே பார்க்கலாம். மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிகமாக நாள் ஒன்றிற்கு ரூ.1 கோடிக்கு மேல் வசூல் செய்யும் முதல் ஐந்து சுங்கச்சாவடிகள் எந்த ஊரில் உள்ளன?, கடந்த 2023 - 2024 ஆம் நிதி ஆண்டில் எவ்வளவு ரூபாய் வசூல் ஆகியுள்ளது என்பது பற்றி மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் எவ்வளவு?: நாட்டில் கடந்த ஜூன் மாதம் வரை தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 983 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மாடும் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. நாடு முழுவதிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 457 புதிய சுங்கச்சாவடிகள் கட்டப்பட்டன. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 15 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் எல்&டி கிருஷ்ணகிரி தோப்பூர் சுங்கச்சாவடியில் ரூ.1,124.19 கோடி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் 981.56 கோடி ரூபாய் அளவிற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு நாளைக்கு ஒரு கோடி: நாட்டிலேயே 5 சுங்கச்சாவடிகளில் மட்டும் நாள் ஒன்றிற்கு தலா 1 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஆகிறது. அதாவது, குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் தான் ரூ.1 கோடி ரூபாய்க்கு மேல் ஒரு நாளைக்கு சுங்க கட்டணம் வசூல் ஆகிறது.
நாட்டிலேயே அதிக கட்டணம் வசூல் செய்யும் சுங்கச்சாவடியாக குஜராத்தில் உள்ள பரதனா சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் கடந்த 2023 - 2024 ஆம் நிதி ஆண்டில் ரூ.475.65 கோடி வசூல் ஆகி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்த பரதனா சுங்கச்சாவடியில் ரூ.2,043 கோடி வசூல் ஆகியுள்ளது.
2 ஆம் இடத்தில்: இந்த லிஸ்டில் இரண்டாம் இடத்தில் இருப்பது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஷாஜகான்பூர் சுங்கச்சாவடி ஆகும். இந்த சுங்கச்சாவடியில் கடந்த 2023 -2024 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.429.65 கோடி வசூல் ஆகியுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ஹரியானா மாநிலத்தில் உள்ள கரோண்டா சுங்கச்சாவடி உள்ளது. இந்த கரோண்டா சுங்கச்சாவடியில் கடந்த நிதியாண்டில் ரூ.4,026 கோடி வசூல் ஆகியுள்ளது.
லிஸ்டில் நான்காம் இடத்தில் மேற்கு வங்க மாநிலம் ஜல் துலகோரி சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் கடந்த நிதியாண்டில் ரூ.364.23 கோடி வசூல் ஆகியுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் உத்தரபிரதேச மாநிலம் பரஜோர் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு கடந்த நிதியாண்டில் ரூ.364 கோடி வசூல் ஆகியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில்: நாடு முழுவது உள்ள சுங்கச்சாவடிகளில் கடந்த 2019 - 2020 மற்றும் 2023 - 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ரூ.1.94 லட்சம் கோடி சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. அதிக சுங்கச்சாவடிகள் இருக்கும் பட்டியலில், ராஜஸ்தான் மாநிலம் முதல் இடம் பிடிக்கிறது. இங்கு 142 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதற்கு அடுத்த இடத்தில் உத்தரபிரதேசம் (102) உள்ளது. தமிழ்நாட்டில் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications