பிளாஷ்பேக் 2018: கேரள வெள்ளம் முதல் ராகுல் கட்டியணைத்தது வரை.. முத்தான 10 இந்திய நிகழ்வுகள்!
டெல்லி: 2018 ஆம் ஆண்டுக்கு குட்பை சொல்ல இன்று 3 நாட்களே உள்ள நிலையில் இந்த ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளை யாரும் அசை போடாமல் இருக்க முடியாது.
அந்த வகையில் இந்த ஆண்டு நடந்த முத்தான, தலைப்பு செய்திகளாக மாறிய 10 நிகழ்வுகளை காண்போம். கேரள வெள்ளம் தொடங்கி ராகுல் பிரதமர் மோடியை கட்டி அணைத்து கண் அடித்தது வரை முக்கிய நிகழ்வுகளின் பட்டியல்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் சபரிமலை போராட்டம், மீ டு இயக்கம், கேரள வெள்ளம், கர்தார்பூர் சாலை, வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பால் வன்முறை, கோரோகான் மோதல்கள், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம், அமிருதசரஸ் ரயில் விபத்து, வாஜ்பாய் மற்றும் கருணாநிதி மறைவு ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சை ஆகிய 10 விவகாரங்கள் ஆகும்.

போராட்டம்
சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 பேர் கொண்ட அமர்வில் 4 நீதிபதிகள் பெண்களை அனுமதிக்கலாம் என தீர்ப்பளித்தனர். ஆனால் பெண் நீதிபதி மல்ஹோத்ரா மட்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி ஐப்பசி மாத நடை திறப்பு நடைபெற்றது. அப்போது அங்கு திரண்ட பெண்களை பக்தர்களும் இந்து அமைப்பினரும் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலை தற்போதும் தொடர்கிறது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பாக இருந்தாலும் அதை அமல்படுத்துவதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன.

அமைச்சருக்கு எதிரான புகார்
கடந்த 2008-ஆம் ஆண்டு ஒரு படத்தில் நடித்த போது தனக்கு பாலியல் தொந்தரவுகளை நானா படேகர் அளித்ததாக நடிகை தனுஸ்ரீ தத்தா பரபரப்பு புகார் அளித்தார். அதை தொடர்ந்து பல்வேறு பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் புகார்களை மீ டூ இயக்கம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் தெரிவித்தன. இதில் கைலாஷ் கெர், விகாஷ் பாஹல், ஷாஜித் கான், விவேக் அக்னிஹோத்ரி, அபிஜித் பட்டாச்சார்யா, உட்சவ் சக்கரவர்த்தி என மீ டூ புகாரில் சிக்கினர். இதில் மத்திய அமைச்சரும் முன்னாள் பத்திரிகையாளருமான எம் ஜே அக்பர் மீது 11 பெண்கள் பாலியல் புகார்களை கூறினர்.

வரலாறு காணாத வெள்ளம்
ஆகஸ்ட் மாதம் தொடங்குவதற்கு முன்பு கேரளத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு அந்த மாநிலத்தில் ஏற்பட்டது. 100 ஆண்டுகளில் இல்லாத மழை வெள்ளத்தை அந்த மாநிலம் சந்தித்தது. 370-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஏராளமானோர் வீடுகளை இழந்தனர். ஆரம்பக் கட்ட ஆய்வின் மூலம் மாநிலத்தில் சேத மதிப்பு ரூ. 20ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டது. இந்த மழை வெள்ளத்தின் போது மீட்பு பணியினருடன் சேர்ந்து மீனவர்களும் மக்களை காப்பாற்றினர். நாடு முழுவதும் கேரள மக்களுக்கு நிவாரண பொருட்களும் நிதியும் அனுப்பப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு
பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான சாஹிப் குருத்வாராவுக்கு இந்திய பக்தர்கள் விசா இன்றி பயணம் மேற்கொள்ள சாலை அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தை இரு நாடுகளும் அவரவர் பகுதியில் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினர். பாகிஸ்தான் பகுதியில் நடந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு பாக் பிரதமர் இம்ரான் கான் அழைக்கவில்லை. எனினும் பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சித்துவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் வேண்டாம் என சொல்லியும் சித்து கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நீர்த்து போக செய்த உச்சநீதிமன்றம்
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், மத்தியப்பிரதேசம், உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில இடங்களில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைப்பு, சாலை மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வன்முறையில் 10 பேர் இறந்தனர். மத்தியப்பிரதேச மாவட்டத்தில் நடந்த வன்முறையில் 19 பேர் காயமடைந்தனர்.

மோதல்கள்
200 ஆண்டுகளுக்கு முந்தைய பீமா கோரேகான் யுத்த வெற்றியை தலித்துகள் கொண்டாட இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த எதிர்ப்பை மீறி நாடு முழுவதும் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தலித்துகள் பீமா கோரேகானில் ஒன்று திரண்டனர். அப்போது இந்துத்துவா அமைப்புகள் தாக்குதல் நடத்தியதில் புனேவில் தலித் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதிலும் பல்வேறு மோதல் சம்பவங்கள் நடைபெற்றன.

மோடியை கட்டியணைத்த ராகுல்
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. முன்னதாக மக்களவையில் விவாதம் நடைபெற்றது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். ராகுல் காந்தி தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள், பெண்களின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பெட்ரோல், டீசல் விலை, சிறுபான்மையினர், தலித்துகள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ராகுல் பேசி முடித்ததும் பிரதமர் மோடி இடத்துக்கு சென்று அவரை கட்டியணைத்தார். பின்னர் ராகுல் காந்தியை அழைத்த மோடி அவருக்கு கைக்குலுக்கினார்.

60 பேர் பலி
பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் தசரா கொண்டாட்டத்தின் போது ராவணன் சிலை எரிப்பை ஏராளமானோர் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது பட்டாசு வெடிக்கப்பட்டது. அதில் சிதறிய சிலர் ரயில் டிராக்கின் மீது ஓடினர். அச்சமயம் வேகமாக வந்த ரயில் இவர்கள் மீது மோதியது. இதில் 60 பேர் பலியாகிவிட்டனர். 140 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அரசியல் பிரபலங்கள்
தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்த மு. கருணாநிதி உடல் நலக் குறைவுகளால் பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் அவரது 94-ஆவது வயதில் காலமானார். அவருக்கு மெரினாவில் சமாதி அமைக்க இடம் ஒதுக்க அரசு மறுத்த நிலையில் திமுக நீதிமன்றம் சென்று போராடி இடத்தை பெற்றனர். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர், பிரதமராக இருந்த வாஜ்பாய் நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் தனது 95-ஆவது வயதில் காலமானார். அதுபோல் இந்த ஆண்டில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்தகுமாரும், முன்னாள் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியும் காலமானார்கள்.

ரஃபேல் விமான ஒப்பந்தம்
பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனத்திடம் 36 ரஃபேல் ரக அதிநவீன போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. சுமார் ரூ.58 ஆயிரம் கோடி மதிப்புள்ளதாக கணக்கிடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ரஃபேல் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தும் விதத்தில் தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று கூறினர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications